இளைஞர் தலைதுண்டித்து கொலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இளைஞர் தலைதுண்டித்து கொலை

Added : நவ 18, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருநெல்வேலி:நெல்லை மாவட்டம், தாழையூத்து அருகே மர்ம நபர்கள் இளைஞரை ஒருவரை கொலை செய்து தலையைமட்டும் துண்டித்து மேலப்பாலமடை சமுதாயக்கூடத்தில் வைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தலையை கைப்பற்றி உடலைத் தேடி வருகின்றனர்.
நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பால்துரை, 18. இவரது தாய் ஊர் நெல்லை மாவட்டம், தாழையூத்து அருகே உள்ள மேலப்பாலாமடை. பால்துரை வேலைக்கு ஒன்றும் செல்லாததால் வீரமாணிக்கபுரம் மற்றும் மேலப்பாலமடையில் உள்ள தனது தாய் வீட்டில் மாறிமாறி இருப்பது வழக்கம். இன்று அதிகாலை மேலப்பாலமடை கிராமத்தின் மையப்பகுதியில் ஒருவரின் தலையை மட்டும் துண்டித்து வைக்கப்பட்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்.பி., அருண்சக்திகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலையை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் தலை துண்டிக்கப்பட்டவர் பால்துரை என்பது தெரியவந்தது. இறந்தது தன் மகன் தான் என அவரது தாயும் அடையாளம் கண்டு உறுதி செய்தார். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து பால்துரையை கொலை செய்ய காரணம் என்ன? கொலையாளிகள் யார் ? உடலை எங்கே போட்டுள்ளனர் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 18 வயது இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-நவ-201820:53:44 IST Report Abuse
ஆப்பு ஸ்காட்லாண்டு யார்டு போலூஸ் தயவுல தமிழகம் அமைதிப் பூங்காவா இருக்கு. திருநெல்வேலில்லாம் கணக்கில வராது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X