போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை| Dinamalar

போலீஸ் அதிகாரிகளுக்கு உ.பி., முதல்வர் எச்சரிக்கை

Updated : நவ 19, 2018 | Added : நவ 19, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
போலீஸ் ,அதிகாரிகளுக்கு, உ.பி., முதல்வர், எச்சரிக்கை

லக்னோ:''பணியில் ஒழுங்காக இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் பாடம் கற்றுத் தரப்படும்,'' என, போலீஸ் அதிகாரிகளுக்கு, உத்தர பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. சமீப காலங்களில், குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததை அடுத்து, போலீஸ் அதிகாரிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:போலீஸ் அதிகாரிகள் ஒழுங்காக தங்கள் கடமையை ஆற்ற வேண்டும். இல்லாவிட்டால், சரியான பாடம் கற்றுத் தரப்படும். பணியில் விழிப்புடன் இருக்க வேண்டும். குற்றவாளிகள் தான், உங்களை பார்த்து பயப்பட வேண்டும்.குற்றங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதுவரை பதிவான வழக்குகளில், விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். ரோந்துப் பணியில் போலீசார் ஈடுபடுவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தின்போது, போக்குவரத்து கூடுதல் டைரக்டர் ஜெனரல், எம்.கே. பஷாலை பணியிட மாற்றம் செய்து, ஆதித்யநாத் உத்தரவிட்டார். மாமூல் வசூலித்ததாக, மற்றொரு போலீஸ் அதிகாரிக்கு, கட்டாய ஓய்வு கொடுக்கவும், அவர் உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-நவ-201809:59:39 IST Report Abuse
Thiagu அப்போ சூசை கிங் மேக்கர் இல்லையா ? அப்போ எங்க ஓட்டும் உனக்கு இல்ல
Rate this:
Share this comment
Cancel
Sandru - Chennai,இந்தியா
20-நவ-201809:23:26 IST Report Abuse
Sandru குற்றவாளிகள் ஆட்சிக்கு தலைமை ஏற்றால் குற்றங்கள் பெறுவது சகஜம் என்பது இந்த பரமார்த்த குருவிற்கு தெரியாதா
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
20-நவ-201808:56:42 IST Report Abuse
Rpalnivelu இந்தியாவின் கண்ணீர் துளிகளான உ பி, பிகார், போன்றவை காங்கிரஸ், குடும்ப கட்சியான சமாஜ்வாதி, யானைப் பார்ட்டி கட்சி, மாட்டுக் கட்சி, போன்றவையால் ஏழ்மையாகப்பட்டு சுரண்டிவிடப்பட்டுள்ளன. பெரும்பாலான மக்கள் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதி இதுதான் என வாழ்ந்து வருகின்றனர். கல்வியறிவு குறைவு. மிகக்குறைவு. சுகாதார அறிவுமில்லை. இவர்களை நிமிர்த்த வேண்டுமானால் பாஜாகா இன்னொரு மூன்று முறையாவது ஆட்சியிலிருக்க வேண்டும். தமிழகத்தின் தினசரி மின்சார தேவை 13000 யூனிட். பீகாரின் தேவை வெறும் 3000 யூனிட்க்கும் குறைவே. நம் அறிவு ஜீவிகளும்/திருடர்களும் இதற்கு ஒப்புவார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X