சீக்கிய கலவர வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சீக்கிய கலவர வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனை

Added : நவ 20, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சீக்கிய கலவர வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனை

புதுடில்லி: டில்லியில், கடந்த 1984ம் ஆண்டு நடந்த சீக்கிய கலவரம் தொடர்பான வழக்கில், ஒருவருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பேர் கொலை

பிரதமராக இருந்த இந்திரா, 1984ம் ஆண்டு அக்., 31ம் தேதி தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பெரும கலவரம் வெடித்தது. இதில், 2,800 சீக்கியர்களுக்கு கொல்லப்பட்டனர். டில்லியில், மஹிபால்பூர் என்ற இடத்தில், ஹர்தேவ் சிங் மற்றும் அவதார் சிங் என்ற இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில், யஷ்பால் சிங் மற்றும் நரேஷ் ஷெராவத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போதிய சாட்சியங்கள் என கூறி 1994ல் இந்த வழக்கை டில்லி போலீசார் முடித்து விட்டனர்.
எனினும், எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்தது. டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக விசாரணை நடந்து கடந்த நவ., 15ல் யஷ்பால் சிங்கும், நரேசும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. இன்று(நவ.,20) இருவருக்குமான தண்டனை அறிவிக்கப்பட்டது. இதில் யஷ்பால் சிங்குக்கு தூக்கு தண்டனையும், நரேசுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
21-நவ-201809:49:21 IST Report Abuse
Mohamed Ilyas தீர்ப்பே 24 வருடம் கழித்து இப்பொழுது தான் வந்துள்ளது இன்னும் மேல் முறையீடு கருணை மனு என்று முடிவதற்குள் குற்றவாளி தானாகவே இருந்து விடுவான் கவலை படாதீங்க
Rate this:
Share this comment
Cancel
Elumalai K - Mayavaram,இந்தியா
21-நவ-201806:00:11 IST Report Abuse
Elumalai K Maut ka Saudagar = merchant of டெத் Rajiv கண்டி & Khoon ki Dalali = trade of (a soldier's) blood Rajiv கண்டி said When a big tree falls, the earth shakes. Rajiv Gandhi, commenting on the 1984 anti-Sikh riots following the murder of Indira Gandhi, quoted in Hindustan Times [1]
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
21-நவ-201803:55:22 IST Report Abuse
meenakshisundaram இந்த அவகாசம் தேவையா?ஜே வழக்கில் என்னமோ லேட்டா ஆயிருச்சு என்று கூப்பாடு போட்டவர்கள் இப்போ எங்கே ?தமிழ் நாட்டை விட்டே வெளியேறிவிட்டார்களா?இலங்கை தமிழன்னு சத்தம் போடுறவனுக்கு 'சீக்கியன்' என்றால் வெளி நாட்டவன் ஆயிட்டானா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X