நிலங்களுக்கு, 'புதார்' எண் ஆந்திராவில் திட்டம் துவக்கம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

நிலங்களுக்கு, 'புதார்' எண் ஆந்திராவில் திட்டம் துவக்கம்

Added : நவ 20, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நிலம், புதார் எண்,  ஆந்திரா, திட்டம், துவக்கம்

விஜயவாடா :ஆந்திராவில், நிலம் தொடர்பான ஆவணங்களை மக்கள் பார்க்கும் வகையில், 'புதார்' என்ற இணையதளத்தை, அம்மாநில அரசு துவக்கி உள்ளது.

மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள, ஆதார் எண்ணை போன்று, ஆந்திராவில், நில ஆவணங்களுக்கு, 'புதார்' என்ற, 11 இலக்க அடையாள எண் அளிக்கப்படுகிறது.ஆந்திராவில் உள்ள அனைத்து விவசாய நிலம், ஊரக, நகர்ப்புற சொத்துகளுக்கு, 'புதார்' அடையாள எண் வழங்கப்படுகிறது. இந்த எண்ணை பயன் படுத்தி, மக்கள், தங்கள் நிலம் மற்றும் சொத்துகள் தொடர்பான ஆவணங்களை, 'புதார்' என்ற அரசு இணைய தளத்தில் பார்க்கலாம்.ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியில், இந்த திட்டத்தை, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு, நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:


தற்காலிகமானது


ஆந்திரா முழுவதும், நிலங்களுக்கு, புதார் என்ற அடையாள எண் அளிக்கப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்கள், இணைய தளத்தில் இடம்பெறும். நிலம் கைமாறும்போது அதற்கேற்ப புதிய தகவல்கள், இணையதளத்தில் பதிவேற்றப்படும்.புதார் திட்டத்தால், நிலம் தொடர்பான ஊழல்கள், மோசடிகள் நடக்காமல் தடுக்க முடியும். தங்கள் சொத்து தொடர்பான, புதார் அடையாள எண் உடைய அட்டையை, மக்கள், தங்கள் சட்டை பையில் வைத்துக் கொள்ள முடியும்.சர்ச்சை உள்ள நிலங்கள், மறு பதிவு நடக்கவுள்ள நிலங்கள் ஆகியவற்றுக்கு, '99' என்ற எண்ணுடன் கூடிய அடையாள அட்டை தரப்படுகிறது. இந்த எண்ணை வைத்து, சம்பந்தப்பட்ட நிலத்துக்கான எண், தற்காலிகமானது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தனியார் நிலத்துக்கு, 28ல் துவங்கும் எண்ணுடன் அடையாள அட்டை தரப்படுகிறது. அரசு நிலமாக இருந்தால், 28க்கு பின், '00' உடன், அடையாள எண் வழங்கப்படும். ஆந்திரா முழுவதும், 3.57 கோடி நில ஆவணங்களுக்கு, புதார் அடையாள அட்டை வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
xpsmaroon -  ( Posted via: Dinamalar Android App )
21-நவ-201812:39:25 IST Report Abuse
xpsmaroon ஊருக்குள்ள வெட்டியாக பேசி திரியும் அரசியல் வாதிகளுக்கு உதார் என் கொடுக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
கோமாளி - erode,இந்தியா
21-நவ-201809:23:29 IST Report Abuse
கோமாளி பட்டா, சிட்டா, ரசரரசர், அடங்கல் இத்தனையும் ஒரே ஆவணமா கொண்டு வரனும்
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Chennai,இந்தியா
21-நவ-201806:02:29 IST Report Abuse
 Muruga Vel இது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் காலம் காலமாக நடப்பில் இருக்கு … TCS போன்ற நிறுவனங்கள் தான் இந்தியாவில் பல மாநிலங்களில் தொடங்கியுள்ளனர் .. நீங்க எந்த நம்பரை காட்டினாலும் பட்டா எங்கே... சிட்டி சர்வே நம்பர் என்று கழுத்தறுப்பார்கள் … பெரிய நிலத்தை சின்ன சின்ன பகுதிகளாக பிரித்து விற்றால் அதை பல ஆண்டுகள் முறைப்படுத்த மாட்டார்கள் ….
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X