ஹர்திக் மீதான வழக்கில் குற்றப்பதிவு | Dinamalar

ஹர்திக் மீதான வழக்கில் குற்றப்பதிவு

Added : நவ 20, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
  ஹர்திக், மீதான, வழக்கில் ,குற்றப்பதிவு

ஆமதாபாத், படேல் சமூக தலைவர், ஹர்திக் படேலுக்கு எதிரான தேச துரோக வழக்கில், ஆமதாபாத் கோர்ட்டில், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில்செல்வாக்குடன் திகழும் படேல் சமூகத்தினருக்கு, கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்க கோரி, ஹர்திக் படேல், 25, தலைமையில், 2015ல், மாநிலம் முழுவதும் பேராட்டம் நடந்தது.ஆமதாபாதில் நடந்த போராட்டத்தில், வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக, ஹர்திக், அவரது ஆதரவாளர்கள் பம்பானியா, சிராக் படேல் ஆகியோர் மீது, போலீசார், தேசத்துரோக வழக்கு பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்ட மூவரும், ஜாமினில் வெளியே வந்தனர்.இந்த வழக்கு விசாரணை, ஆமதாபாத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்த வழக்கில், ஆமதாபாத் குற்றப்பிரிவு போலீசார், ஹர்திக் உட்பட மூவர் மீதும்,18 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர் .இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, ஆமதாபாத் நீதமன்றத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி, ஹர்திக் உட்பட மூவரும், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். குற்றப்பத்திரிகையை வாசித்த நீதிபதி, மூன்று பேர் மீதும், தேசத்துரோக சட்டப்பிரிவின் கீழ், குற்றங்களை பதிவு செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X