India's First Engineless Train Likely To Start Operating By December 15 | 'டிச., 15 முதல் இயங்க போகிறது இன்ஜினில்லா ரயில்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'டிச., 15 முதல் இயங்க போகிறது இன்ஜினில்லா ரயில்

Added : நவ 20, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
'டிச., 15 முதல் இயங்க போகிறது இன்ஜினில்லா ரயில்

புதுடில்லி: 'நாட்டில், முதன்முறையாக, இன்ஜின் இல்லாமல் இயங்கக் கூடிய, 'ரயில் 18' என்ற ரயில், 160 கி.மீ., வேகத்தில், டிச., 15 முதல், செயல்பாட்டுக்கு வரும்' என, ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. தற்போது, இந்த ரயிலின் சோதனை ஓட்டம், உத்தர பிரதேச மாநிலம், மொரதாபாதில் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat - chennai,இந்தியா
24-நவ-201810:29:41 IST Report Abuse
venkat செயல் வீரர் தீர்க்க தரிசி பிரதமர் மோடியின் பி ஜெ பி NDA அரசு மேக் இன் இந்திய திட்டத்தில் இந்த மணிக்கு 160 கி மீ வேகத்தில் பறக்கும் மின் ரயில் வண்டித் தொடர் உலகத்தரம் வாய்ந்ததாக மிகக் குறுகிய 18 மாதங்களில் கருத்துரு முதல் செயலாக்கம் வரை நமது சென்னை ஐ சி எப் தொழிற்சாலையில் பல புதிய தொழில் நுட்பங்களை உள்ளடக்கி உருவாக்கப் பட்டுள்ளது. அடுத்த மாதங்களில் டெல்லி போபால் ஹபிப்க்கஞ் வரை சதாப்தி ரயில் தொடருக்கு பதிலாக நமது இந்திய ட்ரெயின் 18 பறக்கப் போகிறது. இதை மேலும் சிறப்பாக்கி ட்ரெயின் 20 ம் ஐ சி எப் ல் இன்னும் இரு வருடங்களில் வெளி வரும். மோடியின் தீர்க்க தரிசன வழி காட்டுதலுக்கும், ஐ சி எப் பொது மேலாளர் திரு S மணி அவர்களின் மேற்பார்வையில் உருவாக்கிய தொழிநுட்ப வல்லுநர், தொழிலாளர்களுக்கும் பாராட்டுகள். ஏழைகள் எல்லோருக்கும் ரூ 15000 இலவச மானிய கழிப்பறை, சௌபாக்கிய திட்ட இலவச மின் இணைப்புடன் குறைந்த விலை சலுகை மானிய வீடுகள், ஒவ்வொரு இந்திய ஏழைக்குடும்பத்துக்கும் (50 கோடி பேர் அளவு) வருடம் ரூ 5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு, ஏழை இல்லத்தரசிகள் 5 கோடி பேருக்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு என்று எல்லோருக்கும் எல்லாமும் திட்டமிட்டு செயலாற்றி வரும் பிரதமர் மோடியின் அடுத்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில், ஜப்பானைப் போல புல்லட் ரயில், ரோ ரோ கப்பல் பயண போக்குவரத்து, நீர் மேல் இறங்கும் விமானங்கள், இந்திய கடற்கரை துறைமுக நகரங்களுக்கு இடையே சொகுசு cruise கப்பல்கள், உள்நாட்டு நதி நீர் வழித்தடங்களில் கப்பல் படகு பயணி, பொருள் போக்குவரத்து, எல்லா சிறு பெரு நகரங்களிலும் உதான் விமான நிலைய பயண வசதி, மெட்ரோ ரயில் வசதிகள். தனிப் பெட்டக ரயில் பாதைகள் போன்ற புதிய வளர்ச்சி சவுகரிய திட்டங்கள் கிடைக்கவிருக்கின்றன. இவற்றில் பல தற்போதே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. விவரம் தெரியோர், அறியார், புரியோர், இணையத்தில் திட்டப் பெயருடன் ஸ்டேட்டஸ் (status ) இணைத்து வினவித் தேடித் தெரிந்து கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
24-நவ-201814:03:13 IST Report Abuse
Apposthalan samlinதமிழ் நாட்டில் தயாரித்து விட்டு வட நாட்டுக்கு கொடிக்கிறதே நம்ம வேலையா போச்சு.ஊட்டியில் இன்னும் டீசல் என்ஜின் தான் ஓடுகிறது.தமிழ் நாட்டில் வட நாட்டு காரன் பயன் படுத்தி செகண்ட் ஹாண்ட் coach தான் இங்கே வருகிறது.அதிக வருமானம் தருவது தென் ரயில்வே தான் வட நாட்டுக்காரன் டிக்கெட் எடுக்க மாட்டான் கேட்டால் கொலை மிரட்டல் விடுவான்.வேலை வாய்ப்பிலும் தென் ரயில்வேயில் வட இந்தியர்களே அதிகம்.யாரு இதை கேட்பது? தமிழக அரசு வாயே பொத்தி இருக்கிறது ....
Rate this:
Share this comment
venkat - chennai,இந்தியா
24-நவ-201815:27:42 IST Report Abuse
venkat//தமிழ் நாட்டில் தயாரித்து விட்டு வட நாட்டுக்கு கொடிக்கிறதே நம்ம வேலையா// பல்லாயிரக்கணக்கான ரயில் பேட்டிகள் பல வருடங்களாக தயாரிக்கும் தொழிற்சாலை தமிழகத்தில் ICF இந்திய அரசு நிறுவியதால் இங்குள்ளோர் பலருக்கும் வேலை கிடைத்ததும், சென்னையை சுற்றி பல சிறு குறு தொழிற்சாலைகள் பலன் பெற்றதையும் பார்த்து வடநாட்டான் ஏன் இது தமிழ் நாட்டுக்கு என்று கேட்டான். வட நாட்டில் தயாரித்த ரயில் என்ஜின்களும், LHB ரயில் பெட்டிகளும், மெட்ரோ பெட்டிகளும், தமிழ் நாட்டில் ஓடவில்லையா? ட்ரெயின் 18 மற்றும் ட்ரெயின் 20 இது அடுத்து சென்னை பெங்களூரு தடத்தில் மற்றும் அதிகம் உற்பத்தியாகும் போது இந்திய முழுதும் ஒட்டப்படும். இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் பயன் படுகிறது என்பதே சரியான பார்வை. பிழைப்பிற்காக எதிலும் பிரிவினை வாதம் செய்வதும் பிழைப்பின்றி திரிபு வாதத்தினர் பின் செல்வதும் உள்நோக்கு மற்றும் மடமை. இன்னொரு உதாரணம் >> பிரிவினை பத்திரிக்கை செய்திகள்படி மத்திய அரசு தமிழகத்திற்கு அளித்த நிதி உதவி பற்றி திரு தம்பித்துரை மற்றும் பிரதமர் மோடி அவர்கள் கூறியவை >> முதலில் திரு தம்பித்துரை கூற்று >> மத்திய அரசு, திட்டங்களை மட்டுமே விளம்பரத்திற்காக அறிவிக்கிறது. அதற்கு உண்டான நிதியை வழங்குவதில்லை << 240218 பத்திரிகை செய்திப்படி பிரதமர் மோடி சென்னையில் சொன்னது இதோ > > 13 வது நிதிக் கமிஷன்படி காங்கிரஸ் upa அரசு தமிழகத்திற்கு கொடுத்தது ரூ 81,000 கோடி. ஆனால் பி ஜெ பி NDA மத்திய அரசு 14 வது நிதிக் கமிஷன்படி தமிழகத்துக்கு அளித்தது ரூ 1,80,000 கோடி ,” தவிர தமிழ் மக்களுக்கு கிராமப்புற வீடுகள் கட்ட பி ஜெ பி NDA மோடி மத்திய அரசு 2016 -17 ல் ரூ 700 கோடி, 2017 -18 ல் ரூ 200 கோடி மற்றும் தமிழ் மக்கள் நகர வீடுகள் கட்ட ரூ 6,000 கோடிக்கு மேல் கொடுத்துள்ளது. தவிர மோடி பி ஜெ பி nda மத்திய அரசு 9 .5 லட்சம் ஏழை தமிழக இல்லத்தத்தரசிகளுக்கு இலவச காஸ் அடுப்பிணைப்பு வழங்கியுள்ளது. மோடி பி ஜெ பி மத்திய அரசு சென்னை மெட்ரோ ரயிலுக்கு ரூ 3700 கோடி, தமிழகத்திலே மத்திய அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு ரூ 24,000 கோடி அளித்துள்ளது. << இச்செய்திகள்படி இவ்விடயத்தில் உண்மையை தமிழ் மக்களே அறிந்து புரிந்து கொள்ளலாம். ....
Rate this:
Share this comment
Cancel
21-நவ-201802:34:09 IST Report Abuse
ஆப்பு ஏற்கனவே 2 கோடி பேருக்கு வேலை குடுத்து களைச்சுப் போயீட்டங்க...மக்களும் வேலை செஞ்சு மாஞ்சு போயிட்டாங்க...அதான் டிரைவரில்லாத ரயில்.
Rate this:
Share this comment
Arunkumar - THANJAVUR,இந்தியா
24-நவ-201811:55:56 IST Report Abuse
Arunkumarடிரைவர் இல்லாத ரயில் இல்ல பாஸ். இஞ்சின் இல்லா ரயில். நன்றாக படித்த பிறகு பதிவிடவும்....
Rate this:
Share this comment
Cancel
Indhiyan - Chennai,இந்தியா
21-நவ-201801:44:25 IST Report Abuse
Indhiyan இன்ஜின் இல்லேன்னா அப்புறம் பின்னாடி இருந்து யார் தள்ளி விடுவாங்க?
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
24-நவ-201812:15:17 IST Report Abuse
பலராமன்உங்கள மாதிரி ஆட்கள் தான்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X