பிரதமராவதற்கு சிறந்த நபர் ராகுல் தான்: வீரப்ப மொய்லி| Dinamalar

பிரதமராவதற்கு சிறந்த நபர் ராகுல் தான்: வீரப்ப மொய்லி

Added : நவ 21, 2018 | கருத்துகள் (62)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ராகுல் காந்தி, வீரப்ப மொய்லி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் , சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ், பாரதிய ஜனதா, பா.ஜ.,காங்.,ராகுல், Rahul Gandhi, Veerappa Moily, Prime Minister Modi, Congress leader Rahul, Chandrababu Naidu, Congress, Bharatiya Janata, BJP, Rahul,

ஐதராபாத் : நாட்டின் அடுத்த பிரதமராவதற்கு சிறப்பான நபர் காங்., தலைவர் ராகுல் தான் என அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய காங்., மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறார். தேசிய அளவில் காங்கிரசுக்கு ஆதரவு பெருகி வருகிறது. பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது கூட்டணி கட்சிகளை இழந்து வருகிறது.

பிரதமர் பதவிக்கு ராகுலுக்கு மாற்று என்ற கேள்விக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. பிரதமராவதற்கு சரியான, சிறப்பான நபர் ராகுல் மட்டுமே. தேசிய அளவில் பா.ஜ.,வை எதிர்க்கும் கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. 5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்., தான் வெற்றி பெறும். இந்த வெற்றி எங்கள் கட்சி தலைவரான ராகுலுக்கு கூடுதல் மதிப்பையும், பலத்தையும் பெற்று தரும்.

யார் அடுத்த பிரதமர் என்பது தொடர்பாக பா.ஜ., விற்கு எதிரான கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அனைவரும் மோடி மற்றும் பா.ஜ.,விற்கு எதிராக ஒன்றுபட்டு வருகின்றனர். மோடி மற்றும் பா.ஜ.,வை எதிர்ப்பதே எங்களின் நோக்கம் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.BASKARAN - BANGALORE,இந்தியா
22-நவ-201807:48:52 IST Report Abuse
S.BASKARAN ராகுல் வந்தால் மீண்டும் காங்கிரஸ் மக்கள் முன்புமாற்றி (செயல்களை) செய்ய ஏதுவாக இருக்கும் போல
Rate this:
Share this comment
Cancel
joseph vijay - Chennai,இந்தியா
22-நவ-201807:44:03 IST Report Abuse
joseph vijay தவறு தளபதி விஜயுடன் ஒப்பிடும்போது ராகுல் சின்ன பையன் . தளபதி சர்க்கார் வெற்றி பெறுவது உறுதி. மக்களெல்லாம் ஜோசப் தம்பியை பிரதமர் ஆக்கோணும் என்ன செய்வீர்களா ? செய்வீர்களா ? செய்வீர்களா ?
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
22-நவ-201807:17:30 IST Report Abuse
Gnanam காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி: "மோடி மற்றும் பா.ஜ.,வை எதிர்ப்பதே எங்களின் நோக்கம்" என்று உண்மையை சொல்லிவிட்டார். நாட்டையும், மக்களையும் பற்றி கவலையில்லை. உண்மையாக உழைத்துவரும் ஒரு நல்ல தலைவரையும், லஞ்சஊழல் இல்லாத இந்த ஆட்சியையும் கழிக்கவேண்டும் என்பதுவே இவரது நோக்கமாம்.
Rate this:
Share this comment
ramadass - mayiladuthurai,இந்தியா
23-நவ-201811:28:29 IST Report Abuse
ramadassஅம்மா நான் வீரப்ப மொய்(லி) வந்திருக்கேன், எனக்கு மொய் எழுதுங்களேன்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X