ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டசபை கலைப்பு | Dinamalar

ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டசபை கலைப்பு

Updated : நவ 21, 2018 | Added : நவ 21, 2018 | கருத்துகள் (7+ 27)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஜம்மு காஷ்மீர், சட்டசபை ,கலைப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், தேசிய மாநாட்டு கட்சி, காங்., ஆதரவுடன், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், சட்டசபையை கலைத்து, கவர்னர் சத்யபால் மாலிக், நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
ஜம்மு - காஷ்மீரில், 2014ல் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், பி.டி.பி., எனப்படும் மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ., ஆகியவை இணைந்து, கூட்டணி ஆட்சி அமைத்தன. பி.டி.பி., தலைவர் மெஹபூபா முப்தி, முதல்வராக பதவியேற்றார். இரு கட்சிகள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து, மெஹபூபா முப்தி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, பா.ஜ., விலக்கியது. இதையடுத்து, கவர்னர் ஆட்சி அமலானது. வரும், டிச., 19ம் தேதியுடன், கவர்னர் ஆட்சி அமைந்து, ஆறு மாதங்கள் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், சஜ்ஜத் லோன் தலைவராக உள்ள, மக்கள் மாநாட்டு கட்சி தலைமையில், ஆட்சி அமைக்க, பா.ஜ., திட்டமிட்டது. இதையடுத்து, கவர்னர் சத்யபால் மாலிக்கை சந்தித்த, சஜ்ஜத் லோன், ''என்னை, பா.ஜ.,வின், 26 எம்.எல்.ஏ.,க்கள், பிற கட்சிகளை சேர்ந்த, 18 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரிக்கின்றனர். எனவே, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும்,'' என, கோரிக்கை விடுத்தார்.
அதேபோல், காங்., மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை ஆதரிப்பதால், தனக்கு, 56 எம்.எல்.ஏ.,க்கள் பலம் இருப்பதாக கூறி, ஆட்சியமைக்க உரிமை கோரி, கவர்னரிடம் கடிதம் தந்தார், மெஹபூபா முப்தி.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் சட்டசபை கலைக்கப்படுவதாக, கவர்னர் சத்யபால் மாலிக், இரவு அறிவித்தார். இந்த அறிவிப்பு, ஜம்மு- காஷ்மீர் மாநில அரசியலில், பெரும் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7+ 27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-நவ-201821:53:31 IST Report Abuse
முக்கண் மைந்தன் அதுக்குதானெ இந்தாள அங்கன ஒக்காத்தி வெச்சானுங்க....
Rate this:
Share this comment
Cancel
அன்பு - தஞ்சை,இந்தியா
21-நவ-201821:45:41 IST Report Abuse
அன்பு கவர்னருக்கு கலைக்கும் அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார்கள். அதை அனுமதிக்க வேண்டும். மாநில அதிகாரத்தில் மத்திய அரசு மூக்கை நுழைப்பது தவறான அணுகுமுறை.
Rate this:
Share this comment
Cancel
KARTHIKEYAN IP - chennai,இந்தியா
21-நவ-201821:44:47 IST Report Abuse
KARTHIKEYAN IP காங்கிரஸ் மைண்ட் வாய்ஸ்: ஐயோ, வட போச்சே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X