கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(நவ.,22) விடுமுறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(நவ.,22) விடுமுறை

Updated : நவ 22, 2018 | Added : நவ 21, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பள்ளி, விடுமுறை

சென்னை: பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட 5மாவட்டங்களில் இன்று(நவ.,22) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்டகலெக்டர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.

திருவாரூர், வேலூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


அண்ணா பல்கலைதேர்வு ஒத்திவைப்பு


நாகை, திருவாரூர் , புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெற உள்ள அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று, நாளை நடைபெற இருக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. மேலும் பிற மாவட்டங்களில் நடைபெறும் தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
22-நவ-201810:26:43 IST Report Abuse
Girija இதெல்லாம் டிராமா இன்னிக்குதான் மெனக்கெட்டு இவர்களும் பள்ளிக்கூடம் போவார்கள் பெற்றோர்களும் ஸீன் போடுவார்கள். பொது அறிவு வேண்டும் , 10 மணி நேரம் தொடர்ந்து மழை பெயர்கிறது, ஆபத்துக்கள் அதிகம், மேலும் ஏற்கனவே பல்வேறு தொற்று நோய்கள் வேறு உள்ளது . ஆசிரியர்கள் குறிப்பாக அரசாங்க ஆசிரியர் உத்யோகம் போல் கொடுத்து வைத்தது எதுவும் இல்லை கொள்ளை சம்பளம், இதில் அடுத்த மாதம் போராட்டமாம் கூடுதலாக இரண்டு சனிக்கிழமைகள் வேலை பார்ப்பதால் தேய்ந்து போய்விட மாட்டார்கள். ஆசிரியர்களுக்கு வருடத்தில் 104 வார விடுமுறை (சனி, ஞாயிறு ) அரசாங்க விடுமுறை 14, காலாண்டு தேர்வு விடுமுறை 10 (தசரா) அரையாண்டு விடுமுறை 10 (கிறிஸ்மஸ்) ஆண்டு விடுமுறை 45, தவிர ஆண்டிற்கு தற்செயல் விடுப்பு 12, பணி விடுமுறை 22, மருத்துவ விடுமுறை 30 ஆக மொத்தம் 247 நாட்கள் விடுமுறை ஆண்டிற்கு காலை ஒன்பது மணி முதல் மாலை நாலு மணி வரை தான் பணி ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஐந்து பீரியட் தான்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-நவ-201805:09:28 IST Report Abuse
Bhaskaran இதற்காகத்தான் பள்ளியில் முதல்பருவதில் லாங்டர்ம் மாதம் இரு சனிக்கிழமைகளில் வேலைநாட்களாக செயல்பட்டு பாடங்களை முடித்திருந்தால் இம்மாதிரி இயற்கை உத்பாதங்கள் சமயத்தில் துணிந்து பள்ளிவிடுமுறை விடலாம் ஆனால் ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை வேலைநாளென்றால் மிகவும் கஷ்டப்படுவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X