gaja storm | நிஜ ஹீரோக்கள்...| Dinamalar

நிஜ ஹீரோக்கள்...

Updated : நவ 29, 2018 | Added : நவ 29, 2018
Advertisement


மி்ன்சாரத்தை கொடுத்துவிட்டால் பாதி பிரச்னையில் இருந்து மீண்டுவிடலாம் என்று மும்முரமாக அரசு செயல்படுகிறது பாதிக்கப்பட்ட இடங்களுக்கு போய் இருந்த போது மின் கம்பம் அமைக்கும் பணியைத்தான் பெரும்பாலும் பார்க்க முடிந்தது

பொழுது விடிவதற்குள் தங்கள் வேலையை ஆரம்பித்துவிடுகி்ன்றனர் பொழுது முடிந்தபிறகும் தங்கள் வேலையை தொடருகின்றனர்.பழைய கம்பங்கள் எல்லாம் வேலைக்கு ஆகாது என்பதால் புதிதாகவே மின்கம்பம் நடுகி்ன்றனர்.வயல்காட்டிலும் முள்காட்டிலும் மின்கம்பத்தை நடும் பணியில் கடுமையாக வேலை செய்கின்றனர்.

ஆனால் நாகை மாவட்டத்தில் அமைச்சர்கள் முகாமிட்டு இருப்பதால் அங்கே மட்டுமே மின் கம்பம் சாய்ந்து போனது போல போர்க்கால வேகத்தில் அனைவரும் முகாமிட்டு வேலை பார்க்கின்றனர் இங்கே உள்ள மின் ஊழியர்களில் நுாற்றில் பத்து சதவீதம் பேர் மற்ற மாவட்டங்களிலும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் இந்த மாதத்திற்குள்ளாவது மின்சாரத்தை கண்ணால் பார்ப்பார்கள்

சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஊழியர்களுக்கு ஒவ்வொரு நாளும் மூன்றுமடங்கு சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது நல்ல அணுகுமுறை. மின்வாரிய ஊழியர்களும் பல்வேறு சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு மின்கம்பங்களைப் பதிக்கப் போராடி வருகிறார்கள். அந்தக் கடைநிலை ஊழியர்களின் பணி அளப்பரியது. ஆனால், தேவைகளோடு ஒப்பிட்டால் களத்திலுள்ள அரசு பணியாளர்களின் எண்ணிக்கை குறைவே.

மின்கம்பம் நடுதலில், தொழில்நுட்பம் சாராத, மனித உழைப்பு மட்டும் தேவைப்படும் பணிகளில் ஈடுபட விருப்பம் உள்ள உள்ளூர்/வெளியூர் பொதுமக்களும் இப்பணிகளில் ஈடுபடலாம் என்று அறிவிப்பு கொடுத்தால் ஏராளமான பணியாட்கள் கிடைப்பார்கள்( அவசரம் கருதி மின்வாரிய ஊழியர்களுக்குக் கொடுப்பதைப்போல் நல்லதொரு தினக்கூலியை அவர்களுக்கும் கொடுக்கவேண்டும்.). போதிய மரம் அறுக்கும் உபகரணங்கள் கொடுத்து, வீழ்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தவும் இந்தத் தற்காலிகப் பணியாளர்களைப் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் அறுந்து கிடக்கும் மரங்களையும், மின்கம்பங்களையும் சீரமைக்க மாதங்கள் பல ஆகிவிடும்.

அதே போல ஒவ்வொரு புயலின் போதும் அதிகம் பாதிக்கப்படுவது மின்கம்பங்கள்தான் கடந்த புயல்களின் சேதமதிப்பே இதற்கு சாட்சி. நிலமை இப்படியிருக்க மீண்டும் மீண்டும் மின் கம்பங்களின் தயவை நாடாமல் பூமிக்கடியில் மின்கேபிள்களை கொண்டு செல்லும் பணியைச் செய்யலாம் எல்லா பக்கங்களிலும் செய்யாவிட்டாலும் அடிக்கடி புயல் பாதிக்கும் பகுதிகளிலாவது செய்யலாம்.

சாய்ந்து ஒடிந்த மின் கம்பங்கள் மட்டும் ஒரு லட்சத்து3 ஆயிரத்து ஐநுாற்று எட்டு ஆகும் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள் 53லட்சத்து 21 ஆயிரத்து ஐநுாற்று ஆறு ஆகும் இவ்வளவு இணைப்புகளையும் இழந்துவிட்டு எங்கோயோ சோற்றுக்காக அலைந்து கொண்டிருக்கும் மக்களின் மின்சார பில்லை ரத்து செய்யாமல் அடுத்த மாதம் கட்டினால் போதும் என்று சொல்ல அரசுக்கு எப்படித்தான் மனது வந்ததோ?

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in





Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X