அரசு திட்டங்களை பயன்படுத்தி கொள்ளுங்க! மாற்று திறனாளிகளுக்கு முதல்வர் ஆலோசனை Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அரசு திட்டங்களை பயன்படுத்தி கொள்ளுங்க!
மாற்று திறனாளிகளுக்கு முதல்வர் ஆலோசனை

சென்னை : 'அரசு செயல்படுத்தி வரும் சிறந்த திட்டங்களை, மாற்று திறனாளிகள் அனைவரும் பயன்படுத்தி, வாழ்வில் உயர வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

அரசு திட்டங்களை,பயன்படுத்தி கொள்ளுங்க, மாற்று திறனாளிகளுக்கு,முதல்வர்,ஆலோசனை


மாற்று திறனாளிகள் தினத்தையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சமுதாயத்தில், மற்றவர்களுக்கு இணையாக, அனைத்து உரிமைகளையும் பெற்று, மாற்று திறனாளிகள் வாழ்வில் ஏற்றம் பெற, வேலை வாய்ப்பில், 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், மாற்று

திறனாளிகளின் நான்கு மணிநேர பணிக்கு, முழுநாள் ஊதியம் வழங்கப்படுகிறது.

பசுமை வீடுகள் திட்டத்தில், மாற்று திறனாளிகளுக்கு, 3 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. மாற்று திறனாளிகள் தொகுப்பு ஊதிய திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வயது, 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது.மாற்று திறன் உடைய குழந்தைகளின் குறைப்பாட்டை கண்டறிந்து, சிறப்பு டாக்டர்கள் மற்றும் வல்லுனர்கள் வாயிலாக, தகுந்த சிகிச்சை அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தேவையான உபகரணங்கள், சான்றிதழ்கள், உதவித்தொகை போன்றவை வழங்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளிகள், தங்களின் வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்ள ஆலோசனை வழங்க, சென்னையில், மாநில ஆதார வள மையம் நிறுவப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில், பார்வை குறைபாடு உடையவர்கள்,

Advertisement

பாதுகாப்பாக சாலையை கடக்க வசதியாக, சென்னையில், 150 இடங்களில், சாலை சந்திப்புகளில் குரல் ஒலிப்பான் சமிக்கைகள் நிறுவப்பட்டுள்ளன.

மாற்று திறனாளிகளின் தேவை அறிந்து, அவர்கள் மன நிறைவோடு வாழ, தமிழக அரசு, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இந்த திட்டங்களை, மாற்று திறனாளிகள் அனைவரும் பயன்படுத்தி, வாழ்வில் உயர்வடைய வேண்டும். இவ்வாறு, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathy - chennai,இந்தியா
03-டிச-201817:59:40 IST Report Abuse

sathyமாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அதை சாதனை படுத்த வேண்டும்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
03-டிச-201816:53:13 IST Report Abuse

Endrum Indianமாற்று திறனாளிகளுக்கு முதல்வர் ஆலோசனை????முந்த நேற்று தான் கனிமொழி சொன்னார் மாற்றுத்திறனாளிகளை அரசு ஆதரிக்கவேண்டும் என்று. அப்போ நினைத்தேன் பாவம் இவர் போன்ற மாற்றுத்திறனாளிகளை அரசு ஆதரிக்கவில்லை என்று. இப்போ கனிமொழிக்கு இவர் பதில் சொல்வது பல இருக்கின்றது.

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
03-டிச-201814:04:48 IST Report Abuse

Mani . V"அரசு திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அந்த நிதிகளை நாங்கள் ஆட்டையை போட்டு விடுவோம்".

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X