சர்ச்சையில் சுழலும் துணைவேந்தர் தேடல் குழுக்கள்; கவனம் செலுத்துவாரா கவர்னர் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சர்ச்சையில் சுழலும் துணைவேந்தர் தேடல் குழுக்கள்
கவனம் செலுத்துவாரா கவர்னர்

சென்னை : ஐந்து பல்கலைகளுக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடல் குழுக்களில் திறமையான, நடுநிலையான கல்வியாளர்களை, கவர்னர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சர்ச்சையில்,சுழலும்,துணைவேந்தர்,தேடல் குழுக்கள்,கவனம் செலுத்துவாரா,கவர்னர்


பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை நியமிக்க, கவர்னர் சார்பில் தேடல் குழு அமைக்கப்படும்.இந்த குழுவில், சிண்டிகேட் தரப்பில் ஒரு உறுப்பினர், அரசு பிரதிநிதி மற்றும் கவர்னர் பிரதிநிதி என, மூன்று பேர் இடம் பெறுவர். தேடல் குழு உறுப்பினர்கள் மீதே, சில ஆண்டுகளாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. தேடல் குழுவால், சரியான நபர்கள் தேர்வு செய்யப்படுவது இல்லை என்ற, குற்றச்சாட்டும் உள்ளது.

காலியாகும் பதவிகள் :


திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார், கொடைக்கானல் தெரசா, வேலுார் திருவள்ளுவர், சென்னை ஆசிரியர் கல்வியியல் பல்கலை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை என, ஐந்து பல்கலைகளின் துணைவேந்தர் பணியிடங்கள்,

நான்கு மாதங்களில் காலியாக உள்ளன. தற்போதைய துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.

இந்த பல்கலைகளுக்கு, புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்ய, தேடல் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த குழுக்களில், நேர்மையான, திறமையான, நடுநிலையான கல்வியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த காலங்களில், அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் சிபாரிசு பெற்றவர்கள், அரசியல் சார்புள்ள உயர்கல்வி துறையினர், தேடல் குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

அரசியல் செல்வாக்கு :


அரசு தரப்பு பிரதிநிதியாக யாரை நியமித்தாலும், அதை, கவர்னர்அலுவலகம் ஏற்று கொள்கிறது. கவர்னர் அலுவலக செயலர், துணை செயலர்கள் பரிந்துரைக்கும் நபர்கள், கவர்னர் தரப்பு பிரதிநிதியாக தேடல் குழுக்களில் இடம் பெறுகின்றனர். பெரும்பாலும், அரசியல்வாதிகளின் மறைமுக செல்வாக்கு பெற்றவர்கள், கவர்னர் அலுவலக அதிகாரிகள்வழியாக பரிந்துரைக்கப்பட வாய்ப்புள்ளது.

அதேபோல, சிண்டிகேட் உறுப்பினர்களில் பெரும்பாலானோர், அரசு அதிகாரிகளாகவும், அரசின் நியமன உறுப்பினர்களாகவும் இருப்பதால், சிண்டிகேட் சார்பிலும், அரசியல் செல்வாக்கு பெற்றவர்களே இடம் பெறுகின்றனர்.

Advertisement

வரிசை கட்டிய வழக்குகள் :


கடந்த காலங்களில், தேடல் குழுக்களின் உறுப்பினர்கள் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேடல் குழுக்களால் சரியான நபர்கள்தேர்வு செய்யப்படுவது இல்லை என்பதும், மதுரை காமராஜ் பல்கலை மற்றும் பாரதியார் பல்கலையின் துணைவேந்தர் பதவி நீக்க விவகாரங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, தற்போது காலியாக உள்ள, ஐந்து பல்கலைகளின் துணைவேந்தர்களின் நியமனத்திலாவது, அரசியல் பின்புலம், அதிகார செல்வாக்கு இல்லாதவர்களை, தேடல் குழுக்களில் நியமிக்க வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நேரடியாக தலையிட்டு, ஊழல் இல்லாத தேடல் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Kanchipuram,இந்தியா
03-டிச-201821:17:18 IST Report Abuse

rajaகீதா லட்சுமி அவர்கள் போன்ற நேர்மையானோர் துணைவேந்தராக தொடர கவர்னர் ஆவண செய்ய வேண்டும்.

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
03-டிச-201814:16:19 IST Report Abuse

Mani . Vஹலோ, எங்களுக்கு அதை விட வேறு வெட்டி வேலைகள் அதிகம் இருக்கிறது.

Rate this:
J.Isaac - bangalore,இந்தியா
03-டிச-201812:01:49 IST Report Abuse

J.Isaacநாட்டில் எல்லா குற்றவாளிகளுக்கும் ஜாமீன் கிடைக்கும் போது நிர்மலா தேவிக்கு மட்டும் ஜாமின் வழங்காதது மர்மமாக உள்ளது

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X