விவசாய கடன் தள்ளுபடி: கமல் வலியுறுத்தல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விவசாய கடன் தள்ளுபடி:
கமல் வலியுறுத்தல்

சென்னை : ''கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என, நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான, கமல் கூறினார்.

விவசாய கடன்,தள்ளுபடி,கமல்,வலியுறுத்தல்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், டில்லியில், இரண்டு நாட்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை முடித்து, சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், நேற்று காலை, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். பின், அங்கிருந்து எழும்பூர் ரயில் நிலையம் சென்றனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தியும், முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும்

என வேண்டியும், நான்காவது பிளாட்பாரத்தில் அமர்ந்து, விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு, போலீசார் அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலையம் வந்த, மக்கள் நீதி மையம் தலைவர் கமல், விவசாயிகளை சந்தித்து பேசினார். போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

பின், நிருபர்களிடம்,கமல் கூறியதாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்த, விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க செய்ய வேண்டும் என, விவசாயிகள், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இந்த கோரிக்கைகள், அரசால் நிறைவேற்ற முடியாதது அல்ல. விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள்நீதி மையமும் அரசுக்கு, அறவழியில் அழுத்தம் கொடுக்கும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வந்தேன். 15 நாட்களாக கூரை இல்லாமல், குடிதண்ணீர் இல்லாமல், மக்கள் திண்டாடுகின்றனர். பல இடங்களுக்கு அரசின்

Advertisement

நிவாரண பொருட்கள், இன்னும் போய் சேரவில்லை. புயல்நிவாரணத்திற்கு, மத்திய அரசு, முதற்கட்ட நிவாரணம் அறிவித்துள்ளதற்கு நன்றி.

மீட்பு பணிகளை, அரசு வேகமாக செய்ய வேண்டும். விழுந்த மரங்களுக்கு இழப்பீடு மட்டும் போதாது. பாதிக்கப்பட்ட மாவட்ட மக்கள் வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்க, இன்னும் ஏழாண்டுகளாகும். இதைக் கருத்தில் வைத்து, போதிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, போலீசார் பலத்த பாதுகாப்புடன், எழும்பூரில் இருந்து, நேற்று மதியம் புறப்பட்ட, வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில், சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (3+ 18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுப்ரமணியன் - ?????? ??? ,இந்தியா
03-டிச-201810:02:27 IST Report Abuse

சுப்ரமணியன்இல்லுமினாட்டிகளின் ஏஜென்ட்...

Rate this:
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
03-டிச-201803:51:09 IST Report Abuse

கும்புடுறேன் சாமிஅய்யாக்கண்ணும் ஒரு நடிகர் கமலும் ஒரு நடிகர் இனம் இனத்தோட சேந்துருச்சு

Rate this:
Manian - Chennai,இந்தியா
03-டிச-201808:18:44 IST Report Abuse

Manianஅய்யாக்கண்ணு பேங்குகளை மூட வழி செய்கிறார். கமல் மக்களின் அறிவை (ரொம்பவும் கொஞ்சம் தான் இருக்கறதையும்) மூட வழி சொல்லுகிறார். ஒருத்தன் மாக்கள் வயிற்றில் அடிக்கிறான், இன்னோருத்தன் மண்டையில் அடிக்கிறான்....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X