பொய்யின் பல்கலை காங்கிரஸ்: மோடி விளாசல் Dinamalar
பதிவு செய்த நாள் :
பொய்யின் பல்கலை காங்கிரஸ்
மோடி விளாசல்

ஜோத்பூர் : ''பொய்யின் பல்கலையாக காங்கிரஸ் கட்சி உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பொய்,பல்கலை,காங்கிரஸ்,மோடி,விளாசல்


முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள, ராஜஸ்தானில், 7ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக, ஜோத்பூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

நான் எங்கிருந்து ஹிந்துத்வா குறித்து தெரிந்து கொண்டேன் என, சிலர் விமர்சனம் செய்கின்றனர். நான் ஒரு சாதாரண தொண்டன் தான். எனக்கு ஹிந்துத்வா குறித்தெல்லாம் அதிகம் தெரியாது. அதே நேரத்தில்,

வாரிசு குடும்பத்தைச் சேர்ந்தவர் எங்கிருந்து ஹிந்துத்வா குறித்து அறிந்தார்...

சேதமடைந்த சோம்நாத் கோவில் புனரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் நடந்தது. சர்தார் படேல் இந்தப் பணியை செய்தார் என்பதற்காக, ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத்தை அதற்கு போகக் கூடாது என, அப்போதைய பிரதமர், ஜவஹர்லால் நேரு கூறினார்.

அந்த பாரம்பரியம் உள்ள குடும்பத்தின் வாரிசு, ஹிந்துத்வா குறித்து பேசுகிறார். ஒருவர், தன் சட்டையில் தினமும் ரோஜாவை வைத்துக் கொள்வார். அவருக்கு ரோஜா தோட்டம் குறித்து தெரியும்; ஆனால், விவசாயம் குறித்தோ, விவசாயிகள் பிரச்னை குறித்தோ தெரியாது. அதுபோலத் தான், காங்கிரசின் தற்போதைய தலைமையும் உள்ளது.

காங்கிரஸ் கட்சி, பொய்களின் பல்கலையாக உள்ளது. அதிகமாக பொய் சொல்பவர்கள் தான்,

Advertisement

அந்த அளவுக்கு கட்சியின் உயர் பதவிக்கு செல்ல முடியும். மிகப் பெரிய பொய்யரான ராகுல், அக்கட்சியின் தலைவரானது இப்படித் தான்.

மற்ற மாநிலங்களில் எல்லாம் அடித்து விரட்டப்பட்ட காங்கிரஸ், ராஜஸ்தானிலும் அதே நிலைமையை சந்திக்கப் போகிறது. இந்த மாநிலத்தில் கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்துள்ளதால், அடுத்தது தங்கள் ஆட்சி தான் என, காங்கிரஸ் நினைக்கிறது; ஆனால், நிலைமை மாறப் போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (39+ 62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
05-டிச-201809:13:58 IST Report Abuse

Dr Kannanமோடிஜி சிறந்த நகைசுவை மன்னர்

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-டிச-201820:13:38 IST Report Abuse

Pugazh Vமிகவும் சரியான கருத்து / குவைத் சுந்தர். பாராட்டுக்கள். இவரது பேச்சு களை படித்தால் இவர் போது பிரதமர் தானா என்று சந்தேகம் வருகிறது. இவரது கட்சி யின் ஆட்சி யில் ரா.தானில் என்ன செய்தார் கள் என்று இவர் முதல் நாள் அந்த மாநில பாஜக பேச்சாளர்கள் வரை யாரும் பேசவில்லை.. பேச எதுவும் இல்லை

Rate this:
J.Isaac - bangalore,இந்தியா
04-டிச-201814:11:48 IST Report Abuse

J.Isaacகாலி பானையில் இருந்துதான் சத்தம் அதிகமாக வரும் .

Rate this:
nandaindia - Vadodara,இந்தியா
04-டிச-201817:19:47 IST Report Abuse

nandaindiaஅதனால் தான் பப்பு இவ்வளவு சவுண்ட் விடுகிறாரா? உண்மையை சொன்னதற்கு நன்றி....

Rate this:
தலைவா - chennai,இந்தியா
04-டிச-201818:41:25 IST Report Abuse

தலைவா வசிஷ்டர் வாயால் பிரம்மா ரிஷி பட்டம் வாங்கி விட்டார் ராகுல் இனிமே தேர்தல் சும்மா அதகளம்தான் ......

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X