'தீபக் மிஸ்ராவை யாரோ இயக்கினர்'; ஓய்வு பெற்ற நீதிபதி ஜோசப் குரியன் பகீர் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'தீபக் மிஸ்ராவை யாரோ இயக்கினர்'
ஓய்வு பெற்ற நீதிபதி ஜோசப் குரியன் பகீர்

புதுடில்லி : ''ஓய்வு பெற்ற, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, தன் பதவி காலத்தில், முக்கிய முடிவுகள் எடுப்பதில், வெளிப்புற சக்திகளின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல்பட்டார்,'' என, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, ஜோசப் குரியன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

தீபக் மிஸ்ரா,யாரோ இயக்கினர்,ஓய்வு பெற்ற நீதிபதி,ஜோசப் குரியன்,பகீர்


இது குறித்து, டில்லியில் செய்தியாளர்களிடம் ஜோசப் குரியன் பேசியதாவது: உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலத்தில், பல்வேறு சங்கடங்களை எதிர்கொள்ள நேர்ந்தது.

குறிப்பாக, அப்போதைய தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ராவின் செயல்கள் மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தின; அவர், ஒருவித அழுத்தத்துடன் காணப்பட்டார்.

முக்கிய முடிவுகள் எடுத்தபோதெல்லாம், வெளிப்புற சக்திகளின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு நடந்ததாகவே தோன்றுகிறது. ஆனால், அது ஒரு நபரா அல்லது அரசியல் கட்சியா... என்றெல்லாம் குறிப்பிட்டு சொல்ல முடியாது. என் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமின்றி, வழக்குகளை பிரித்து கொடுத்தல் உள்ளிட்ட பல செயல்களில், தீபக் மிஸ்ராவை வெளிப்புற சக்தி ஆட்டிப்படைத்தது.

தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, தற்போதைய தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் உள்ளிட்ட நீதிபதிகள் என்னுடன் கைகோர்த்தனர். மிஸ்ராவுக்கு எதிராக நாங்கள் நடத்திய போராட்டம்,

Advertisement

மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும், அவரால், சுயமாக முடிவெடுக்க முடியாத நிலையில் இருந்தார் என்பதை, எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. தற்போதைய தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் சிறப்பாக செயலாற்றி வருகிறார். இதற்கு மேல், இந்த விவகாரத்தை பெரிது படுத்த விரும்பவில்லை. இதை இத்துடன் விட்டுவிடுவது நல்லது. இவ்வாறு கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kaliyan Pillai - Chennai,இந்தியா
05-டிச-201813:52:06 IST Report Abuse

Kaliyan Pillaiநீர்த்துப்போன நீதித்துறை? அப்புறம் சாமான்யனுக்கு இங்கே என்ன நீதி கிடைக்கும்? உச்ச நீதிமன்றமே ரிமோட் கண்ட்ரோலுக்கு கட்டுப்பட்டிருந்தால் இங்கு நடப்பது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? ஜனநாயகத்தை மீட்டெடுக்க மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் தேவைப்படுகிறதா? கட்டவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யும் மேதாவிகள் இருக்கும்வரை இந்த நாடு எப்படி உருப்படும்?

Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
05-டிச-201804:46:26 IST Report Abuse

 nicolethomsonநீங்க யாரோட வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடந்தீங்க? சுயமாய் சிந்திப்பவர்கள் என்றால் கொலிஜியம் எதற்கு சார்? உங்களையும் மக்கள் கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும்? நீங்க தவறு செய்கிற போதெல்லாம் நாங்க பார்த்துகிட்டு இருக்க வேண்டுமா? ஒரு பொதுமனிதனாய் தீபக் மிஸ்ரா யோசித்திருப்பார், அதனால் நீங்க செய்யுற அட்டூழியத்தை கண்டு மனம் வெதும்பியிருக்கலாம்

Rate this:
Krishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-டிச-201820:58:20 IST Report Abuse

Krishnaஇது இந்தியா சுதந்தரம் கிடைத்ததிலிருந்து நடப்பதுதான் .

Rate this:
மேலும் 44 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X