ஆர்.கே.நகர் தேர்தலில் பணம் பட்டுவாடா வழக்கு ரத்து Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆர்.கே.நகர் தேர்தலில்
பணம் பட்டுவாடா வழக்கு ரத்து

சென்னை : 'சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணம் பட்டுவாடாவுக்கு முயற்சி நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு, ரத்து செய்யப்பட்டு விட்டது' என, உயர் நீதிமன்றத்தில், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முதல் தகவல் அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெறாதது குறித்து, போலீஸ் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆர்.கே.நகர் தேர்தல்,பணம் பட்டுவாடா,வழக்கு,ரத்து


சென்னை, ஆர்.கே.நகரில், ௨௦௧௭ ஏப்ரலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு முன், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, அமைச்சர்கள், நிர்வாகிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் இருந்ததாக, தகவல் வெளியானது. அதில், ௮௯ கோடி ரூபாய் என, குறிப்பிடப்பட்டிருந்தது.

வருமான வரித்துறை அளித்த அறிக்கை அடிப்படையில், போலீசில் தேர்தல் கமிஷன் புகார் அளித்தது. இந்தப் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றவும் கோரி, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் வைரக்கண்ணன், தி.மு.க., வேட்பாளர் மருது கணேஷ் மற்றும் அருண் நடராஜன் வழக்கு தொடர்ந்தனர். மனுக்களை, நீதிபதிகள் சத்தியநாராயணன், எம்.சுந்தர் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அபிராமபுரம் போலீஸ்

நிலையத்தில், வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக, நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

முதல் தகவல் அறிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், அதில் பெயர்கள் எதுவும் இடம் பெறாதது குறித்து, கேள்வி எழுப்பினர். வழக்கை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய, இணை கமிஷனர்களுக்கும் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ஓராண்டு ஆகியும், அறிக்கை தாக்கல் செய்யாதது குறித்து, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கில், பணம் பட்டுவாடா தொடர்பான முதல் தகவல் அறிக்கையை, உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதை கேட்டதும், நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, பதில் அளிக்கும்படி தெரிவித்தனர். பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ஏ.நடராஜன் ஆஜராகி, ''அரசு தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவித்தும், முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

உடன் நீதிபதிகள், 'அரசு தரப்பில் வழக்கை முறையாக எதிர்கொள்ளவில்லை' என்றனர். மேலும், போலீஸ் இணை கமிஷனர்கள், ஏன் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினர். தி.மு.க., வேட்பாளர் தரப்பில், மூத்த வழக்கறிஞர், பி.வில்சன், ''இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்,'' என்றார். வழக்கறிஞர், வி.இளங்கோவனும், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றும்படி கோரினார்.

Advertisement

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றும்படி வலியுறுத்தினாலும், தற்போதைய நிலையில், அவ்வாறு உத்தரவிட விரும்பவில்லை. சென்னை கிழக்கு இணை கமிஷனர் மற்றும் அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர், பதில் அளிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும். வழக்கு பதிவு செய்யப்பட்டதில் இருந்து, முதல் தகவல் அறிக்கை ரத்தாகும் வரை, குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் இடம் பெறாதது ஏன் என்பதற்கு, இணை கமிஷனர்கள் மனோகரன், அன்பு மற்றும் இன்ஸ்பெக்டர் விளக்கம் அளிக்க வேண்டும்.

உரிய ஆவணங்களுடன், பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டதா என்பதற்கும், அரசு விளக்கம் தர வேண்டும். முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரிய, நரசிம்மன் என்பவர் யார் என்பது குறித்தும், அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையை, வரும், ௧௭ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்த வழக்கில், வருமான வரித்துறை கைப்பற்றிய பணம், ஆவணங்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, வருமான வரித்துறை வழக்கறிஞருக்கும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-டிச-201821:36:29 IST Report Abuse

Pugazh Vஈழத்தில் இனமா? வெகுளி எந்த இனத்தை சொல்றார்? டுமிளர்னு சொல்வாங்களே அந்த இனமா? இல்லை டாஸ்மாக் டம்ளர் என்று சொல்வாங்களே அந்த இனமா? இந்த செய்திக்கும் ஈழத்துக்கும் என்ன சம்பந்தம்?

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
04-டிச-201815:41:58 IST Report Abuse

Endrum Indianநாடகமே இந்த நீதிமன்றம், ஆடுவதோ பொம்மலாட்டம். வழக்கு தள்ளுபடி செய்தது தெரியாதாம்???வடிவேலு கூட ஜட்ஜாக இருக்கலாம் போல இருக்கு.

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
04-டிச-201811:00:36 IST Report Abuse

நக்கீரன்நடத்துங்க உங்க நாடகத்தை.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X