நிரவ் மோடி வெளிநாடு தப்பிக்க வருமான வரித்துறை காரணமா? Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
நிரவ் மோடி வெளிநாடு தப்பிக்க
வருமான வரித்துறை காரணமா?

மும்பை: 'பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடியின் மோசடிகள் குறித்து, வருமான வரித்துறை விரிவாக ஆய்வு செய்தும், அந்த தகவல் மற்ற அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. 'இதுவே, அவன் வெளிநாடு தப்பிச் செல்வதற்கு சாதகமாகிவிட்டது' என, தெரியவந்துள்ளது.

நிரவ் மோடி,வெளிநாடு,தப்பிக்க,வருமான வரித்துறை,காரணமா?


பிரபல வைர வியாபாரிகளான, நிரவ் மோடி மற்றும் அவனது உறவினரான முகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது, இந்தாண்டு பிப்ரவரியில் தெரிய வந்தது. இது தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் சோக்சி, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர்.



வருமான வரித் துறை, கடந்தாண்டு ஜனவரியில், நிரவ் மோடி மற்றும் சோக்சிக்கு சொந்தமான, 45 இடங்களில் சோதனையிட்டது. இதன் அடிப்படையில், 10 ஆயிரம் பக்கங்கள் உடைய விரிவான அறிக்கையை தயார் செய்தது. அதில், இவர்கள் இருவரும் செய்த பல மோசடிகள் குறித்து கூறப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூன் மாதம் இந்த அறிக்கை தயாரானது. ஆனால், நிதி மோசடிகள் தொடர்பாக விசாரிக்கும் மற்ற அமைப்புகளுக்கு, இந்த அறிக்கை பகிர்ந்து கொள்ளப்படவில்லை; இது பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தால், மற்ற அமைப்புகளும் விசாரணையை தீவிரப்படுத்திஇருக்கும். அதன் மூலம், இருவரும் வெளிநாடு தப்பிச் செல்வதை தவிர்த்திருக்க முடியும் என, கூறப்படுகிறது.

இது குறித்து, வருமான வரித் துறை உயரதிகாரிகள் கூறியதாவது: வருமான வரித்துறை யின் சோதனைகள் குறித்த அறிக்கையை, மற்ற அமைப்புகளுடன் பகிர்ந்து

Advertisement

கொள்ள வேண்டும் என்ற நடைமுறை அந்த காலகட்டத்தில் இல்லை. தற்போது, வருமான வரித் துறையின், நிதி புலனாய்வு பிரிவுக்கு, அனைத்து தகவல்களும் அளிக்கப்படுகின்றன. அந்த அமைப்பின் மூலம், மற்ற புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

நிரவ் மோடி மற்றும் சோக்சி தொடர்பாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகைகளில், வருமான வரித் துறையின் விரிவான அறிக்கை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-டிச-201822:09:17 IST Report Abuse

தமிழ்வேல் இப்போதான் புரியுது எதனால பிரதமர் விமானத்திலேயே போனார் என்று.

Rate this:
04-டிச-201811:39:06 IST Report Abuse

ஸாயிப்ரியாபெருவெள்ளத்தில் சிறு துளி தந்தால் நினைத்த இடத்தில் வழி திறக்கும்.

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
04-டிச-201810:55:51 IST Report Abuse

நக்கீரன்எல்லாமே கூட்டு களவாணிகள்தானே. அப்புறம் எப்படி தகவல்களை மற்றவர்களிடம் பரிமாறுவார்கள்? சரி. தகவல்களை பரிமாறாத வருமான வரித்துறை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அதுவும் தெரியவில்லை. இப்படி மக்களிடம் மூடி மறைக்கப்படும் விஷயங்கள் அதிகம்.

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X