நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை வழங்கிய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை
வழங்கிய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்

சென்னை : அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின், ஒரு மாத சம்பளத்தை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, சபாநாயகர் தனபால் வழங்கினார்.

நிவாரண நிதி,ஒரு மாத சம்பளம்,அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.க்கள்


'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். நேற்று, சபாநாயகர் தனபால், அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சட்டசபை செயலர்

சீனிவாசன் ஆகியோர், தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர்.

அப்போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் ஒரு மாத சம்பளமான, 86.62 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வரிடம் வழங்கினர். அமைச்சர்களும், தங்களின் ஒரு மாத சம்பளத்தை வழங்கி உள்ளனர். அதேபோல, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், காங்., - எம்.எல்.ஏ.,க்களும் வழங்கி உள்ளனர்.

அ.தி.மு.க.,வினரும், மாவட்ட வாரியாக நிதி அளித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மாவட்ட செயலர் கணேசன், 10 லட்சம் ரூபாய்; மத்திய மாவட்ட செயலர் ஆறுமுகம், 10.95 லட்சம் ரூபாய்; கிழக்கு மாவட்ட செயலர் ராஜேந்திரன், 10.25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, நேற்று முதல்வரிடம் வழங்கினர்.

Advertisement

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பில், காஞ்சிபுரம் எம்.பி., மரகதம் குமரவேல், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை, முதல்வரிடம் வழங்கினார். 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, நேற்று வரை, 48.65 கோடி ரூபாய் வந்துள்ளது. நேற்று மட்டும் முதல்வரை சந்தித்தோர், 8.53 கோடி ரூபாய் நிதி அளித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
04-டிச-201819:37:59 IST Report Abuse

தமிழ் மைந்தன் கடந்த 2011ல் அறிவாலயத்தில் இரண்டாவது தளத்தில் நடந்த ஒப்பந்தப்படி சுமார் 12% தொகையை கொடுத்தாலே இந்த கஜா புயல் பாதிப்பை சமாளிக்க முடியும்............ நடக்குமா.....

Rate this:
Thiagu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-டிச-201816:14:32 IST Report Abuse

Thiaguஇதெல்லாம் ஒண்ணுமே இல்ல .சூசை குடும்பம் வாழ் நாள் சம்பளத்தை தமிழர் நலனுக்கென ஒதுக்குவார்கள் .முதலமைச்சர் ஆனா அதான் ஆக போறது இல்ல .சும்மா அடிச்சி விடுங்க சார்

Rate this:
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
04-டிச-201809:48:56 IST Report Abuse

தமிழ் மைந்தன் தஞ்சசாவூர் வங்கியில் வராக்கடன் பட்டியலில் இன்றவரை முதலிடத்தில் உள்ள அந்த ஊழல் பொறுப்பில் உள்ளவர் எவ்வளவு கொடுத்தார்......

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X