'மருத்துவ சேவையை கிராமங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்'; துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவுரை Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'மருத்துவ சேவையை கிராமங்களுக்கும்
விரிவுபடுத்த வேண்டும்'; துணை ஜனாதிபதி
வெங்கையா நாயுடு அறிவுரை

சென்னை : ''மருத்துவ சேவையை, கிராமப்புறங்களுக்கும் விரிவுபடுத்த, தனியார் துறையினர் முன் வர வேண்டும்,'' என, தெரிவித்தார்.

மருத்துவ சேவை,கிராமங்கள்,,துணை ஜனாதிபதி,வெங்கையா நாயுடு,அறிவுரை


சென்னை, பெருங்குடியில் அமைக்கப்பட்டுள்ள, 'ஜெம்' மருத்துவமனையை, நேற்று துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்துவதில், இந்தியா குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது. விரிவான மருத்துவ சேவைகளை வழங்குவதில், நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் இடையேயான வித்தியாசம், பெரும் சவாலாக உள்ளது.

தனியார் துறையினர், நகர்ப்புறங்களில் தான் அதிக கவனம் செலுத்துகின்றனர்; பெரும்பாலான மக்கள் வசிக்கும் கிராமப்புறங்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.டாக்டர்கள், நோயாளிகளிடம், கணிவுடன் நடந்து கொள்வதோடு, மனிதநேயத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டும்.

அரசு, தனியார் துறையினர், தொண்டு நிறுவனத்தினர், பொது சுகாதார திட்டமிடுவோர் மற்றும் வல்லுனர்கள் ஒருங்கிணைந்து, ஆரோக்கியமான, வலிமையான, இந்தியாவை உருவாக்க முன் வர வேண்டும். இவ்வாறு, வெங்கையா நாயுடு பேசினார்.

முதல்வர் பழனிசாமி பேசியதாவது: மகப்பேறு மற்றும் குழந்தை நல திட்டங்களை, சிறப்பாக செயல்படுத்துதல்; தாய், சேய் இறப்பு விகிதத்தை குறைத்தல் உள்ளிட்ட, சுகாதார திட்டங்களில், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவின் மருத்துவ தலைநகராக, தமிழகம் உள்ளது.

Advertisement

மதுரை மாவட்டம், தோப்பூரில், 1,500 கோடி ரூபாய் செலவில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. கரூரில் புதிய அரசு மருத்துவ கல்லுாரி, விருதுநகரில் புதிய பல் மருத்துவக் கல்லுாரி துவங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், 50 ஏக்கர் நிலப்பரப்பில், 60 கோடி ரூபாயில் நிறுவப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
04-டிச-201810:59:26 IST Report Abuse

நக்கீரன்மக்களிடம் நோய்களை உருவாக்கி, பரப்பி அதன்மூலம் படித்த டாக்டர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் துப்புக்கெட்ட அரசு. சுத்தமான குடிநீர், மாசில்லாத சுற்றுப்புறம், தூய்மையான காற்று ஆகியவற்றை கொடுத்தால், யார்க்கு நோய் வரப்போகிறது? இப்படி தும்பை விட்டு வாலை பிடித்து மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி கொள்ளை அடிக்கிறார்கள்.

Rate this:
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
04-டிச-201804:26:27 IST Report Abuse

கும்புடுறேன் சாமிகுட்கா வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவருடன் துணை ஜனாதிபதியும் கவர்னரும் நிற்பது அவர்கள் பதவிக்கு அழகல்ல

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X