ரூ.154 கோடி வருமானம்; 7 வயது சிறுவன் அசத்தல்| Dinamalar

ரூ.154 கோடி வருமானம்; 7 வயது சிறுவன் அசத்தல்

Added : டிச 05, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Forbes Magazine,Ryan Toys Review,America,  Ryan World, போர்ப்ஸ் பத்திரிகை, அமெரிக்கா, அமெரிக்கா 7 வயது சிறுவன் , ரயான் டாய்ஸ் ரிவியூ, ரயான் வேர்ல்டு, விளையாட்டு விமர்சனம், போர்ப்ஸ், USA, USA 7 year old boy,  Sports Review, Forbes,

வாஷிங்டன் : சர்வதேச அளவில், சமூக வலைதளமான, 'யூ டியூப்' மூலம், அதிக வருமானம் ஈட்டியவர்கள் குறித்து, பிரபல, 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், அமெரிக்காவைச் சேர்ந்த, 7 வயது சிறுவன் முதலிடம் பிடித்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'போர்ப்ஸ்' பத்திரிகை, சர்வதேச அளவில் பிரபலமானது. இது, சர்வதேச அளவில், சமூக வலைதளமான, 'யூ டியூப்' வாயிலாக, அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் குறித்து ஆய்வு நடத்தி, பட்டியல் வெளியிட்டு உள்ளது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த, 7 வயது சிறுவன், ரயான், 2018ல், 154 கோடி ரூபாய் சம்பாதித்து, பட்டியலில், முதலிடம் பிடித்துள்ளான்.

ரயானுக்கு, 4 வயதாக இருக்கும் போது, 2015ல், 'ரயான் டாய்ஸ் ரிவியூ' என்ற, 'யூ டியூப் சேனல்' துவங்கப்பட்டது. இதில், சிறுவர்களின் விளையாட்டு பொருட்கள் குறித்து, ரயான் விமர்சனம் செய்து வருகிறான். இவன் அளிக்கும் விமர்சனம், பலரையும் கவர்ந்ததால், ஏராளமான விளையாட்டு பொருட்கள் பெரியளவில், 'ஹிட்' அடித்தன.

ரயான் யூ டியூப் சேனலுக்கு, 1.7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். ரயான் விமர்சனம் செய்து வெளியிடும், 'வீடியோ'க்கள், 2,600 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளன. விளையாட்டு பொருட்களை விமர்சனம் செய்தது வாயிலாக மட்டும், 2018ல், 154 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, ரயான் சாதனை படைத்துள்ளான்.

இவனை கவுரவிக்கும் வகையில், 'ரயான் வேர்ல்டு' என்ற பெயரில், பொம்மைகள் மற்றும் துணிகளை விற்பனை செய்ய, 'வால்மார்ட்' நிறுவனம், சமீபத்தில், ஒரு தனிப் பிரிவையே துவங்கி உள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து வருவதாக, அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
05-டிச-201820:14:29 IST Report Abuse
chakra ஜக்கி வாசுதேவும் இதில் நல்லாவே சம்பாதிக்கிறாரு
Rate this:
Share this comment
Cancel
Jagadeesh -  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-201819:22:56 IST Report Abuse
Jagadeesh இவன் அவன் னு சொல்லாதீங்க.. இவர்ர்.. அவர்ர் அப்படினு சொல்லுங்க..
Rate this:
Share this comment
Cancel
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
05-டிச-201815:39:59 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் கடின உழைப்பின் மூலம் தான் சம்பாதிக்க முடியும் உயரமுடியும் என்பது அந்த காலம். ஒரே நேரத்தில் அதிக மக்களை ரீச்சடைக்கிற மாதிரி ஏதாவது செய்தால் பணம் மட்டும் அல்ல புகழும் ஒருசேர வந்து சேரும் என்பதற்கு இது உதாரணம். .. அதுசரி, இத்தனை பணத்தை இந்த சின்ன வயதில் சம்பாதித்து விட்டு அப்புறம் காலம் பூரா என்ன செய்யறது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X