மின்சாரம் இன்றி 450 ஊராட்சிகள்; புயல் தாக்கி 20 நாட்களாகியும் தவிப்பு Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தவிப்பு!
மின்சாரம் இன்றி 450 ஊராட்சிகள்;
புயல் தாக்கி 20 நாட்களாகியும்...

புயலால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களை சேர்ந்த, 450 ஊராட்சிகளில், 20 நாட்களுக்கு மேலாகியும், இன்னும் மின் விநியோகம் இல்லாததால், மக்கள் திண்டாடி வருகின்றனர்.

மின்சாரம்,450 ஊராட்சிகள்,புயல்,20 நாட்களாகியும்,தவிப்பு


'கஜா' புயலால், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இந்த மாவட்டங்களில், மின் கம்பம் உள்ளிட்ட சாதனங்கள்

சேதமடைந்ததால், நவ., 16ல், மின் சப்ளை முடங்கியது. சேதமடைந்த சாதனங்களை, பல ஆயிரம் ஊழியர்கள், சீரமைத்து வருகின்றனர்.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மொத்தமுள்ள, 66.32 லட்சம் மின் இணைப்புகளில், நேற்று காலை வரை, 61.86 லட்சம் இணைப்புகளுக்கு, மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள, 4.46 லட்சம் இணைப்புகளுக்கு, மின் விநியோகம் செய்ய வேண்டியுள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள மாநிலங்களில், தமிழகத்தில் மட்டும் தான், அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி உள்ளது. கஜா புயலால், தஞ்சை, நாகை,

Advertisement

புதுக்கோட்டை, திருவாரூரில் அனைத்து பகுதிகளிலும் இருந்த, மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. நகர் பகுதியில் இருந்து, சில கிராமங்கள், 50 - 60 கி.மீ., தொலைவில் உள்ளன.

அவ்வளவு துாரத்திற்கு, புதிய மின் வழித்தடங்கள் அமைத்து, மின் சப்ளை செய்ய வேண்டியுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என, பிரிக்கப்பட்டு, சீரமைப்பு பணி நடக்கிறது. அதில், திருவாரூர், நாகையில், தலா, ஒரு பேரூராட்சி, நகராட்சியில் உள்ள பாதி இணைப்புகளுக்கு, மின் சப்ளை செய்ய வேண்டும்.

தஞ்சையில், நான்கு பேரூராட்சி, ஒரு நகராட்சியும்; புதுக்கோட்டையில், நான்கு பேரூராட்சிகளில், பாதி இணைப்புகளுக்கும், மின்சாரம் வழங்க வேண்டும். அவற்றுடன், நான்கு மாவட்டங்களிலும் உள்ள, 457 ஊராட்சிகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இவ்வாறு அவர்கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
05-டிச-201816:00:04 IST Report Abuse

Visu Iyerஆனால். . GST ரிட்டன் பதிவு செய்ய கால அவகாசம் இல்லை.. பெனால்டி கட்ட வேண்டுமாம்.. பின்னர் அதை எடுத்து கொள்ளலாம் என்கிறார்கள்.. கட்டுவதற்கே பணம் இல்லை என்றால் என்ன செய்ய..?

Rate this:
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
05-டிச-201809:06:26 IST Report Abuse

Chanemougam Ramachandiraneஅரசு ஒடனே நடவடிக்கை எடுக்கணும் மாற்று ஏற்பாடு ஜெனெரேட்டர் மூலம் செயல் படுத்தலாம்

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
05-டிச-201807:41:25 IST Report Abuse

Mani . V"ஹலோ, நாங்கள் மக்கள் வீணாக மின்சார கட்டணம் கட்டி சிரமப்பட வேண்டாம் என்றுதான் மின்சாரமே கொடுக்கவில்லை".

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X