இனி மழை பெய்த உடனே 'லீவ்' கிடையாது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இனி மழை பெய்த உடனே 'லீவ்' கிடையாது

Updated : டிச 05, 2018 | Added : டிச 05, 2018 | கருத்துகள் (29)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மழை, பள்ளிகளுக்கு விடுமுறை, பள்ளிகல்வித்துறை செயலாளர்

சென்னை : மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இனி பள்ளிகளுக்கு மழை பெய்த உடனேயே விடுமுறை விடக்கூடாது. மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை விட வேண்டும். மழையால் பாதிக்கப்படும் பகுதிக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மழையால் போக்குவரத்து பாதிக்கப்படுவது போன்ற சூழல் ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். சிறு தூறல் விழுந்தால் உடனே விடுமுறை அறிவிக்கக் கூடாது.
மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில் அல்லது ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை விடலாம். மழையை பொறுத்து பள்ளி துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு விடுமுறை அறிவிக்கலாம். திருவிழா போன்ற உள்ளூர் விடுமுறை அறிவித்தால் அதற்கு ஈடு செய்யம் வகையில் சனிக்கிழமை வகுப்புக்கள் நடத்த வேண்டும். விடுமுறை காரணமாக பாடத்திட்டம் ஏதும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பள்ளி கல்வித்துறை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர்களுக்கு பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். * இனி மழை பெய்தால் லீவு விடக்கூடாது. * பள்ளிக்கு வாகனங்கள் வரமுடியாத அளவுக்கு மழைநீர் தேங்கினால் மட்டுமே லீவு விட வேண்டும். * பள்ளி துவங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்தான் லீவு முடிவை எடுக்க வேண்டும். * மழை பெய்யும் பகுதிகளுக்கு மட்டும் லீவு விட வேண்டும்; * ஒரு பகுதியில் கனமழை பெய்தால் மாவட்டம் முழுமைக்கும் லீவு அறிவிக்கக்கூடாது. * மழை லீவு நாளுக்கு பதிலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்க வேண்டும். * மழை நிவாரணப்பணிகளின்போது பள்ளிகளில் முகாம் அமைக்கக்கூடாது என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
06-டிச-201803:56:32 IST Report Abuse
 nicolethomson மூன்று மணிநேரத்திற்கு முன்னர் அறிவிப்பு வந்தா பெற்றோர்களுக்கு வாட்சாப் செய்தி அனுப்பும் அளவிலா ஆசிரியர்கள் இருக்கிறார்கள்?
Rate this:
Share this comment
Cancel
சீனு. கூடுவாஞ்சேரி. எந்த ஊரிலாவது மழை எச்சரிக்கை விடுத்தவுடனே லீவ் விடுகிறார்களா. கேரளா, கர்னாடக, மகாராஷ்டிரா முதலிய மாநிலங்களில் பெய்யாத மழையா சென்னையில் பெய்கிறது. அப்படி பார்த்தால் அங்கெல்லாம் மூன்று மாதம் ஸ்கூல் மூடவேண்டியது தான். இவர்கள் விடுமுறை அளித்தவுடன் மழையும் விடுமுறை அளித்து விடுகிறது. அதனால் வர வேண்டிய மழை வராததால் தண்ணீருக்கு அவதி. தீயசக்திகளின் ஆதரவில் குடங்களுடன் சாலை மறியல்.கொண்டாட்டம் தான்.
Rate this:
Share this comment
Cancel
southindian - chennai,இந்தியா
05-டிச-201815:19:51 IST Report Abuse
southindian ஒண்ணா எல்லாம் இடிஞ்சி விழணும் இல்லை என்றால் யாராவது தலைமேல் மரம் விழணும் குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் வந்தால் இவர்களா தூக்கியிட்டு டாக்டரிடம் ஓடுகிறார்கள் முட்டாள் தனமான circular
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X