இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : டிச 05, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 இதே நாளில் அன்று

டிசம்பர் 6, 1956
சட்ட மேதை அம்பேத்கர்: ம.பி., மாநிலம், அம்பாவாதே எனும் கிராமத்தில், 1891 ஏப்., 14ல் பிறந்தார். கொலம்பியா பல்கலையில், எம்.ஏ., -பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் படித்தார்.

நாடு திரும்பிய அவர், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய ஜாதிய அமைப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து போராடினார். நாட்டின் விடுதலைக்கு பின், முதலாவது சட்ட அமைச்சரானார். இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆக செயல்பட்டார். அவரது தலைமையில், இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது.

'திராவிட புத்தம்' என்ற பெயரில், பல ஆயிரக்கணக்கான, 'பட்டியல்' ஜாதி மக்களை, புத்த மதத்தை தழுவ செய்தவர். 1956, டிச., 6ல் காலமானார். நாட்டின் உயரிய, 'பாரத ரத்னா' விருது, 1990ல் வழங்கப்பட்டது. அவர் இறந்த தினம், இன்று.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
06-டிச-201809:50:17 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் வருணாசிரம தர்மத்தில் இருந்து தோன்றிய ஜாதி என்பது தவறானது.. அது கால்டுவெல் என்கிற, சனாதன தர்மம் பற்றியே அறியாத , ஒரு கிறிஸ்துவ ஏஜென்சி மூலம் இந்தியாவிற்கு அனுப்ப பட்ட மத மாற்ற புரோக்கரின் வரலாற்று ஆய்வு என்கிற கட்டுக்கதையினால் உருவாக்க பட்ட சதிவலை. சனாதன தர்மம் செய்யும்தொழிலின் அடிப்படையில் வகுப்புகளை உருவாக்கியது. அதற்கு ஜாதி என்று பெயர் வைத்து அது எங்கள் மதத்தில் இல்லை என்று பொய்ச்சொல்லி அப்பாவி மக்களை அரிசி கொடுத்து மதம் மாற்றி அங்கே போன பிறகும் தலித் கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்று ஜாதியை சொல்லி பிரித்து வைப்பது கிறிஸ்துவம் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X