குழந்தையுடன் குளிரில் தவித்த தாய் : எல்.ஐ.சி., ஊழியர்களின் உதவிக்கரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தையுடன் குளிரில் தவித்த தாய் : எல்.ஐ.சி., ஊழியர்களின் உதவிக்கரம்

Updated : டிச 06, 2018 | Added : டிச 05, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Gaja storm, LIC employees, Muthulakshmi,எல்ஐசி ஊழியர்கள் , நெய்வாசல்பட்டி, கஜா புயல், முத்துலட்சுமி, அரசு அதிகாரிகள், கஜா புயல் பாதிப்பு ,புயல் பாதிப்பு , Neyvasalpatti,   government officials, storm damage, storm impact,

புதுக்கோட்டை: பிறந்து, 18 நாட்களே ஆன கைக்குழந்தையுடன், வெட்டவெளியில், கடும் குளிரில் அவதிப்பட்ட பெண்ணுக்கு, எல்.ஐ.சி., ஊழியர்கள் உதவி செய்து, மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினர்.

புதுக்கோட்டை அருகே, நெய்வாசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், முத்துலட்சுமி, 26. இவருக்கும், மதுரை, மேலுாரைச் சேர்ந்த பிரசாத்துக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கர்ப்பமடைந்த முத்துலட்சுமி, பிரசவத்துக்காக, தாய் வீடான நெய்வாசல்பட்டிக்கு வந்தார்.

'கஜா' புயல் வீசிய, 16ம் தேதி காலை, முத்து லட்சுமிக்கு பிரசவவலி ஏற்பட்டது. ஆட்டோவில் முத்துலெட்சுமி ஏறும்போது, அவர் கண் முன்னே, தங்கியிருந்த வீடு, புயலில் தரைமட்டமானது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துலட்சுமிக்கு, ஆப்பரேஷன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தில் பிரச்னை இருந்ததால், கர்ப்பப் பையும் அகற்றப்பட்டது. இதனால், கடந்த, 2ம் தேதி தான், வீடு திரும்பினார்.

வீடு தரைமட்டமானதால், அவரையும், குழந்தையையும், அருகே உள்ள ஆட்டுக் கொட்டகையில், பெற்றோர் தங்க வைத்துள்ளனர். வெட்ட வெளியில் ஆடுகளை கட்ட, தாழ்வாகக் கட்டப்பட்டிருந்த தகரக் கொட்டகையில், சில நாட்களாக, முத்துலட்சுமி தங்கியுள்ளார்.

நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த, புதுக்கோட்டை, எல்.ஜ.சி., ஊழியர்கள், வெட்ட வெளியில் கடும் குளிரில் நடுங்கிய, தாய், குழந்தையை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, மெத்தை, துணிகள், போர்வை, சோலார் விளக்கு, கொசுவத்தி உள்ளிட்ட பொருட்களை வழங்கி, தற்காலிக பாதுகாப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

புதுக்கோட்டையில் இருந்து, 5 கி.மீ.,யில் அவதிப்பட்டு வரும் முத்துலட்சுமி மற்றும் குழந்தைக்கு, இதுவரை அரசு அதிகாரிகள் யாரும், எந்த உதவியும் செய்யவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
07-டிச-201803:37:31 IST Report Abuse
 nicolethomson வாழ்க என்று செல்லுகையில் வழியும் சேர்ந்த வருது சார், வீட்டில் நிலைமை சரியில்லை எனும்போது கணவனிடம் கூறியிருக்கலாம், இல்லை புள்ளய பார்க்க வர்ற கணவனுக்காவது புரிந்து பொண்டாட்டிய காஜா புயலால் பாதிப்பு அதிகம் இல்லாத மதுரைக்கு அழைத்து சென்றிருக்கலாம், இவ்வளவையும் விட்டு விட்டு ஆட்டுக்கொட்டகையில் தங்கினாளாம், வேதனையா இருக்கு மனித மனத்தை புரிந்து கொள்ள முயல்கையில்
Rate this:
Share this comment
Cancel
06-டிச-201815:39:01 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் தமிழக மக்கள் இன்னும் இந்த திருட்டு திராவிட கூட்டத்தை நம்பி இருக்காமல் உடனடியாக பிரதமரின் அனைவர்க்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக்கொள்ள வேண்டும். கொஞ்சம் பெரிய வீடு கட்டுபவர்கள் பிரதமரின் குறைந்த வட்டி திட்டத்தின் கீழ் கடன் வாங்கி கொள்ளவேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் வீடு , நிலங்களை பிடிங்கி கொண்டு துரத்தி விடுவார்களே தவிர வீடெல்லாம் கட்டி கொடுக்க மாட்டார்கள் , ஜாக்கிரதை.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-டிச-201802:31:11 IST Report Abuse
தமிழ்வேல் அதிமுக என்ன செய்தது ?...
Rate this:
Share this comment
skv - Bangalore,இந்தியா
07-டிச-201806:11:01 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>ரெண்டுமே கொள்ளையர்க்கூட்டம் இப்போது NEW ARRIVAL தினகரன் என்று கொள்ளையன் கூட்டம் ப்ளீஸ் தமிழர்களே என்பது தான் உண்மை அதுக்குவேண்டு முக போல அடித்தொண்டைலே கொரகொரன்னு பேசவேண்டாம் முழிச்சுக்குங்களே இந்த பணமே பிரதானம் என்று அலையும் காசுவேறுகூட்டத்தி நை வெரட்டுங்களேன் செய்யாத வினையாக்களே இல்லே என்று இரண்டும் தங்களைவிட்டால் தமிழாளுக்கு வேறு கதியே இல்லே என்று போடும் ஆட்டம் எவ்ளோ EPS க்கும் OPS க்கு பேசவே தெரியலீங்க செத்தவீட்டுலே துக்கம் விஜாரிக்குறாப்ல இருக்கு இவிகல்லாம் பேசினா .அதுக்கு முகப்போல அடித்தொண்டையிலே கொரகொரன்னு பேசவேண்டாம் ஜ்யாபோல லோலோன்னும் கத்தவேண்டாம் ராஜாத்தி காமராசர் போல பணிவாக மக்களுக்குப்புரியும்படி தெளிவாகப் பேசுங்களேன் , வளவளன்னு வெண்டைக்காய் ரகமா பேசினால் ஒரு இழவும் புரியவே இல்லீங்க சுடாலின் பேசினால் வெறித்தனமாயிருக்கு அர்த்தமே இல்லாதைக்கு காதடிந்துருக்காக...
Rate this:
Share this comment
Cancel
Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
06-டிச-201815:10:24 IST Report Abuse
Muthukumaran முதல்வர் பழனிசாமி தினமலர் படிக்க மாட்டாரா????? செய்தி தாள் படித்தால் தான் ஒருவர் முழு அரசியல்வாதி ஆக முடியும். ஆளும்கட்சியின் செய்தித்தாளை படிக்காதீர்கள். மற்ற செய்தி தாள்கள் எதிர்க்கட்சியின் தொலைக்காட்சியை பாருங்கள். உண்மை விரைவாக உங்களை சேரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X