சபரிமலை போராட்டத்தில் கேடயமாக்கப்படும் குழந்தைகள்| Dinamalar

சபரிமலை போராட்டத்தில் கேடயமாக்கப்படும் குழந்தைகள்

Added : டிச 05, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவனந்தபுரம்: ''கேரள மாநிலம், சபரிமலையில் நடக்கும் போராட்டங்களில், குழந்தைகளை கேடய மாக பயன்படுத்துவோர் மீது, மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்,'' என, அம்மாநில சமூக நல துறை அமைச்சர்,கே.கே. சைலஜா எச்சரித்து உள்ளார்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.நேற்று நடந்த மாநில சட்டசபை கூட்டத்தில், சபரிமலைய அய்யப்பன்கோவிலில் நடக்கும் போராட்டங்களில், குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தும் போக்கு குறித்து, சமூக நலத் துறை அமைச்சர் சைலஜா கூறியதாவது:சபரிமலையில், பக்தர்களும், ஹிந்து ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதில், குழந்தைகளை கேடயமாக பயன்படுத்தினர்.இது தவிர, மாநிலத்தில் நடந்த பல போராட்டங்களில், குழந்தைகள் கேடயமாக பயன்படுத்தப்பட்டனர்.சமீபகாலமாக, பெற்றோருடன் சபரிமலைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துஉள்ளது. கடவுள் பக்தியுடன் குழந்தைகளை அழைத்து வருவது தவறல்ல.ஆனால், போராட்டங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது, அவர்களின் உரிமைகளுக்கு எதிரானது. எனவே, போராட்டங்களுக்கு குழந்தைகளை பயன்படுத்துவோர் மீது, மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X