பொன்மாணிக்கவேல் பதவியை எதிர்த்து அரசு மேல்முறையீடு சந்தேகம் தருகிறது : சொல்கிறார் இல.கணேசன் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொன்மாணிக்கவேல் பதவியை எதிர்த்து அரசு மேல்முறையீடு சந்தேகம் தருகிறது : சொல்கிறார் இல.கணேசன்

Added : டிச 05, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பொன்மாணிக்கவேல் பதவியை எதிர்த்து அரசு மேல்முறையீடு சந்தேகம் தருகிறது :  சொல்கிறார் இல.கணேசன்

மதுரை: ''பொன் மாணிக்கவேல் பதவி நீடிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது,'' என மதுரையில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது: நாடு ஒற்றுமையாக இருக்க கூடாது என்ற எண்ணத்தில் ம.தி.மு.க., செயலர் வைகோ பேசி வருகிறார். அவரது பேச்சை மக்கள் நம்பப்போவதில்லை. மேகதாது அணை கட்டக்கூடாது என்பது தமிழக பா.ஜ., விருப்பம். பிரதமர் மோடி ஆட்சியில் தான் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மேகதாது விவகாரத்தில் எதிர்ப்பை பதிவு செய்துஉள்ளார். நடிகர் ரஜினி விவரம் தெரிந்தவர். மக்களின் உணர்வுகளை புரிந்தவர். அதனால் தான் பிரதமர் மோடி மக்களுக்கு நல்லது செய்ய பாடுபடுவதாக தெரிவித்திருக்கிறார்.தேர்தல் அறிவிப்பு வெளியானதும் கூட்டணி குறித்து மேலிடம் முடிவு செய்யும். இன்று பா.ஜ.,வை ஆதரிப்பவர்கள், நாளை கூட்டணியில் இணையாமல் போகலாம். இன்று விமர்சிப்பவர்கள், நாளை கூட்டணியில் இடம் பெற மாட்டார்கள் என உறுதியாக கூறவும் முடியாது. 'கஜா' புயல் பாதிப்பு குறித்து மத்திய கமிட்டி அளிக்கும் அறிக்கையின்படி தேவையான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும்.பொன் மாணிக்கவேல் பதவி நீடிப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சிலை கடத்தல், கொள்ளைக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதை தடுக்க அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேல்முறையீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்றார்.மாநில செயலர் ஸ்ரீநிவாசன், மாநகர் தலைவர் சசிராமன், துணை தலைவர் ஹரிஹரன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
07-டிச-201804:14:02 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam மாநில அரசு தனது உரிமையை மத்திய அரசுக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ அடகு வைக்கக் கூடாது. எத்தனையோ இளமையான திறமையான, நேர்மையான காவல்துறை அதிகாரிகள் தமிழகத்தில் இருக்கின்றார்கள். அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். சில அதிகாரிகள் நேர்மையானவர்கள் போல் தோன்றுவார்கள். ஆனால், பத்துப் பேரை கைது செய்வார்கள். அதேவேளை தனக்கு வேண்டிய ஐந்து பேரைப் தப்பவைப்பார்கள். இதனால்தான், அரசுக்குக் கெட்ட பெயர் வந்து சேரும். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது, திரு மு கருணாநிதி அவர்கள் தனக்கு உள்நாட்டு அமைச்சைக் கேட்டாராம். அண்ணா சொன்னாராம் "பழி வாங்கிற எண்ணம் உன்னைத் தூண்டிவிட்டது". அதானால் அந்தத் துறையை கருணாநிதி அவர்களுக்குக் கொடுக்கவில்லையாம். பொன் மாணிக்கவேல் அவர்கள் பதவி நீடிப்பைத் தேடிப் போகக் கூடாது. அரசு பதவி நீடிப்புச் செய்திருந்தால், ஏற்றுக்கொண்டிருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
06-டிச-201817:16:23 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam ஆமா இவரு பாஜக இவருபாட்டுக்கு சொல்வாரு , நாங்க்க யாருமே பொன்மாணிக்க வேல் அவர்களுக்கு ஆதரவு குரலோ போராட்டமோ பண்னவில்லையே????? மேளும் இந்த சிலைகள் எல்லாம் இந்துக்களின் கடவுள் பிற மத கோவில் சிலையோ அல்லது எங்க ஜாதி தலவர்க்ளின் சிலையோ கிடயாது, இப்படிக்கு : வைகோ, ஸ்டாலின், தினகரன், கமல், விஜய்காந்த், திருமாவழவன், கிருஷ்ணசாமி, ...........
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
06-டிச-201809:04:50 IST Report Abuse
Swaminathan Nath வைகோ சொல்லுவது அத்தனையும் பொய், இவர்கள் காவேரிக்காக என்ன செய்தார்கள் எண்ணி பார்க்கட்டும், இவர்கள் ஆட்சியில் தான், மேக தாது அணைக்கு எல்லா விஷயங்களும் நடந்தது, இவர்கள் கூட்டணி தான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது அவர்களை ஏன் தட்டடி கேட்கவில்லை, நாடகம் ஆடுகிறார்கள்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X