லோக்சபா தேர்தலோடு இந்த ஆட்சி முடிவு : தினகரன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

லோக்சபா தேர்தலோடு இந்த ஆட்சி முடிவு : தினகரன்

Added : டிச 05, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: ''லோக்சபா தேர்தலோடு, இந்த ஆட்சி முடிவுக்கு வந்து விடும்,'' என, அ.ம.மு.க., துணை பொதுச்செயலர், தினகரன் தெரிவித்தார்.சென்னையில், அவர் அளித்த பேட்டி:புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோது, 'ஜெ., இருந்திருந்தால், இப்படி ரோட்டில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது' என, தெரிவித்தனர். இதற்கெல்லாம் நல்ல முடிவை, தெய்வமாக இருக்கிற ஜெயலலிதா உருவாக்கி தருவார் என, அவர்களிடம் கூறினோம்.துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை விவகாரம் உட்பட, தமிழகத்தை பாதிக்கும் எந்த விஷயமாக இருந்தாலும், சட்டசபையை கூட்டி, தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி, அதை சட்டமாக்கினால் மட்டுமே, தீர்வு காண முடியும்.தமிழகத்தில், யார் தலைமையேற்று, ஆட்சி நடத்துகிறார் என்பதை பொறுத்தே, தமிழகத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும். ஜெ., இருந்தபோது, வடக்கில் இருந்தவர்கள், அவர் அனுமதி இல்லாமல், எதையும் புகுத்த முடியாத நிலை இருந்தது.இன்று, பலவீனமான தலைமை உள்ளது. மத்திய அரசிடம் கைகட்டி சேவகம் செய்கிற ஆட்சி இருக்கும்போது, தமிழகத்திற்கு பெரிதாக, எந்த பலனையும் எதிர்பார்க்க முடியாது. எனவே தான், ஆட்சி மாற்றம் அவசியம் என, மக்கள் விரும்புகின்றனர்.அதனால் தான், 18 எம்.எல்.ஏ.,க்கள் தீர்ப்பை, தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். நாங்கள், மேல்முறையீடு செய்யவில்லை. எனவே, லோக்சபா தேர்தலோடு, 20 சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் வந்தாக வேண்டும்.எட்டு தொகுதிகளில், ஆளும் கட்சி வெற்றி பெறாவிட்டால், ஆட்சி போய் விடும். எனவே, லோக்சபா தேர்தலோடு, இந்த ஆட்சி முடிவுக்கு வந்து விடும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathy - chennai,இந்தியா
06-டிச-201816:56:39 IST Report Abuse
sathy உன்னோட கட்சிக்கு தா மக்கள் முற்றுபுள்ளி வைத்து உன்ன வீட்டோட உக்கார வைக்க போறாங்க
Rate this:
Share this comment
Cancel
Vel - Chennai,இந்தியா
06-டிச-201814:29:56 IST Report Abuse
Vel அம்மாவைதான் அனுப்பி விட்டீர்களே பாஸ்.
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Chennai,இந்தியா
06-டிச-201809:42:43 IST Report Abuse
 Muruga Vel ஜெயாவின் ஆத்மா இந்த மன்னார்குடி மாபியா குடும்பத்த மன்னிப்பாங்களா ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X