தமிழகம், புதுவையில் இன்று மழை: மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம், புதுவையில் இன்று மழை: மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை

Updated : டிச 06, 2018 | Added : டிச 05, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தமிழகம், புதுவையில் இன்று மழை: மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை

சென்னை: இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவ மழை, தமிழகத்தில் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இரண்டு தினங்களுக்கு முன், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட, வட கிழக்கு மாவட்டங்கள் மற்றும் பெரும்பாலான பகுதிகளில், இரண்டு நாட்கள் மிதமான மழை பெய்து உள்ளது.

நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, சோழவரத்தில், 8 செ.மீ., மழை பதிவானது. தாமரைப்பாக்கம், 5; பழநி, 4; பூந்தமல்லி, திருநெல்வேலி - பாபநாசம், 3; போளூர், சென்னை விமான நிலையம், பொன்னேரி, கொடைக்கானல், பட்டுக்கோட்டை, குன்னுார், குமாரபாளையம், பெரியநாயக்கன் பாளையம், செங்குன்றம் ஆகிய இடங்களில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில், இன்று பரவலாக, மிதமான மழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய துணை பொது இயக்குனர், பாலச்சந்திரன் அளித்த பேட்டி: கன்னியாகுமரி முதல், தெற்கு ஆந்திரா வரை நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கில் நகர்ந்து, கன்னியாகுமரி - வடக்கு கேரளா இடையே, நிலை கொண்டுஉள்ளது. அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில், இன்று பரவலாக மழை பெய்யும்.

இந்திய பெருங்கடலின், நிலநடுக்கோட்டை ஒட்டிய பகுதியில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.எனவே, மன்னார் வளைகுடாவுக்கு இடைப்பட்ட, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிக்குள், நாளை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X