சாட்சி பாதுகாப்பு திட்டம் உச்ச நீதிமன்றம் ஒப்புதல்| Dinamalar

சாட்சி பாதுகாப்பு திட்டம் உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

Added : டிச 06, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Supreme Court,  Witness, Central law commission, உச்ச நீதிமன்றம், சாட்சி, சாட்சிகள் பாதுகாப்பு,  மத்திய சட்டக் கமிஷன், வழக்குகள், குற்றவியல் நீதி நடைமுறை,  நீதிபதி வி மலிமாத் , சுப்ரீம் கோர்ட் , 
Protecting Witnesses, Cases, Criminal Justice Procedure, Judge V Malimath ,


புதுடில்லி: வழக்குகளில் சாட்சியம் அளிப்போருக்கு, போதிய பாதுகாப்பு அளிக்கும், மத்திய அரசின் வரைவு திட்டத்துக்கு, உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.வழக்குகளின் கண் மற்றும் காதாக இருக்கும் சாட்சிகளுக்கு, போதிய பாதுகாப்பு அளிக்கும் திட்டம், அமெரிக்கா, சீனா, கனடா உட்பட, பல நாடுகளில், நடைமுறையில் உள்ளது.குற்றவியல் நீதி நடைமுறை தொடர்பாக அமைக்கப்பட்ட, நீதிபதி, வி.மலிமாத் குழு, 'சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, 2003ல் பரிந்துரை செய்திருந்தது.அதன்பின், 2006ல் வெளியிடப்பட்ட, மத்திய சட்டக் கமிஷன் அறிக்கையில், இது தொடர்பான வரைவு திட்டம் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், பாலியல் பலாத்காரம் வழக்கில் சிக்கிய, சாமியார் ஆசாராம் வழக்கில், சாட்சியம் அளித்தவர்கள் மாயமானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, 'சாட்சியம் அளிப்போருக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும்' என, பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்துக்கான வரைவு திட்டம், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சில திருத்தங்களுடன், அதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.'சாட்சிகள் பாதுகாப்பு தொடர்பாக சட்டம் அமல்படுத்தப்படும் வரை, இந்த வரைவு திட்டத்தை அனைத்து மாநிலங்களும் செயல்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
06-டிச-201820:17:29 IST Report Abuse
Pasupathi Subbian இதற்கும் சமீபத்தில் துபையில் இருந்து வந்திருக்கும் தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் , அப்ப்ரூவர் ஆக மாறுவதற்கும் ஏதும் சம்பந்தம் உண்டா. ஏன் என்றால் மோதி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் திட்டமிட்டு, படிப்படியாக நடைபெற்று வருகிறதே அதான்.
Rate this:
Share this comment
Cancel
mano - Dammam,சவுதி அரேபியா
06-டிச-201814:07:27 IST Report Abuse
mano நல்ல தீர்ப்பு. கோர்ட்டில் சாட்சி சொல்லுபவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் நிறைய பேர் முன்வந்து சாட்சி சொல்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
06-டிச-201810:26:36 IST Report Abuse
J.Isaac வைபம் ஊழலில் 43 சாட்சிகள் தற்கொலை செய்து கொண்டது மர்மமாகவே உள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X