UK seeks information from India on Christian Michel extradition | இடைத்தரகர் நாடு கடத்தல்: இந்தியாவிடம் தகவல் கேட்கும் பிரிட்டன்| Dinamalar

இடைத்தரகர் நாடு கடத்தல்: இந்தியாவிடம் தகவல் கேட்கும் பிரிட்டன்

Added : டிச 06, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Christian Michel, Helicopter scam, Britain, கிறிஸ்டியன் மைக்கேல், இந்தியா, பிரிட்டன்,  விவிஐபி ஹெலிகாப்டர், ஹெலிகாப்டர் ஊழல், சிபிஐ,  துபாய், மத்திய அரசு,இங்கிலாந்து,  India, VVIP helicopter,  CBI, Dubai, central government, intermediary deportation, UK,

லண்டன்: ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக நாடு கடத்தப்பட்ட இடைத்தரகர், கிறிஸ்டியன் மைக்கேல் குறித்த தகவல்களை அளிக்கும்படி, இந்தியாவிடம் பிரிட்டன் கோரிக்கை விடுத்துள்ளது.


சிபிஐ காவல்

வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்குவதில் நடந்த ஊழல் தொடர்பாக, துபாயில் பதுங்கியிருந்த பிரிட்டனை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐக்கு கோ்ட் அனுமதி வழங்கியுள்ளது.


குடும்பத்தினருடன் தொடர்பு

இது தொடர்பாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: மைக்கேல் கிறிஸ்டியன் துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டது முதல், அவரது குடும்பத்திற்கு எங்கள் ஊழியர்கள் தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக, அவரது குடும்பத்தினர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். அவர் தற்போது உள்ள சூழ்நிலை குறித்த தகவலை இந்திய அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


கோரிக்கை

இந்நிலையில், சிபிஐ கஸ்டடியில் உள்ள கிறிஸ்டியன் மைக்கேலை சந்திக்க அனுமதி கேட்டு, பிரிட்டன் தூதரக அதிகாரிகள் கோரிக்கை அளித்துள்ளனர். இது தொடர்பாக, மத்திய அரசு இன்னும் முடிவை தெரிவிக்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
06-டிச-201820:18:42 IST Report Abuse
K.Sugavanam பாப்பம்...கடோசீல என்ன ஆவுதுன்னு..
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
06-டிச-201819:56:55 IST Report Abuse
Pasupathi Subbian இத்தாலிய கோர்ட் அந்த இடைத்தரகரை குற்றவாளி என்று அறிவித்த பின் , இந்திய அரசு விசாரணையை ஆரம்பித்தது. நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது, விசாரணைக்கு அவர் வரவில்லை. ஒத்துழைக்கவில்லை. இந்த பிரச்சனையில் முந்தய அரசின் தலையீடு இருந்தது. விசாரணைக்கு வராத காரணத்தால் அவருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் நீதிமன்றம் கொடுத்தது. இதுவரையில் இந்த பிரச்சனையில் தலையிடாத பிரிட்டன். இந்த வழக்குக்கு ஒரு உதவியும் செய்யாத பிரிட்டன். தலைமறைவாக இருந்த நபரை, இரு நாடு ஒப்பந்தத்தின் கீழ் மோடி அவர்களின் முயற்சியில் , துபாய்யிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட குற்றவாளியை பற்றிய விபரங்களை சேகரிப்பது ஏன். அதுவும் இத்தனை நாள் சென்றபின் , இந்தியா வந்ததும் திடீர் என்ற அக்கறை எதனால். இந்த கமிஷன் வியாபாரிக்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடைத்தது எப்படி. இதே போல மல்லையாவை நாடு கடத்த இந்தியா கோரிக்கை விடுத்தபோது , அதற்க்கு ஒத்துழைப்பு கொடுக்காமல். குற்ற விசாரணையை பிரிட்டன் கோர்ட்டில் வாதாடி , நிருபிக்கவேண்டிய அவசியத்தை இந்தியாவுக்கு கொடுத்தது ஏன். எல்லாமே பிரிட்டிஷ் குடியுரிமை வைத்திருக்கும் நம் பப்புவின் ஆதரவா?
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
06-டிச-201817:53:09 IST Report Abuse
Natarajan Ramanathan அவன் நடுவுல புரோக்கர் வேலை பார்த்தான். அதான் தூக்கிட்டோம்னு சொல்ல வேண்டியதுதான். உண்மையும் அதுதானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X