காவிரி பிரச்னை குறித்து திமுகவுடன் விவாதிக்க தயார்: பொன்.ராதா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவிரி பிரச்னை குறித்து திமுகவுடன் விவாதிக்க தயார்: பொன்.ராதா

Added : டிச 06, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 Mekedatu dam,Pon radha, Cauvery problem, திமுக, காவிரி, மேகதாது,  மத்திய அமைச்சர் பொன்.ராதா, காவிரி பிரச்னை,  மேகதாது அணை, பாரதிய ஜனதா , காங்கிரஸ், பா.ஜ.,DMK, Cauvery, mekedatu, Union Minister,  Cauvery dispensation, Bharatiya Janata, Congress, BJP,

சென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி நீர் பிரச்னையில் திமுக தான் துரோகம் செய்தது. காவிரி பிரச்னை குறித்து திமுகவுடன் விவாதிக்க நாங்கள் தயாராக உளளோம். மேகதாதுவில் அணை கட்டுவதை பா.ஜ., ஏற்காது. அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. ஆய்வுக்காக அறிக்கை தயாரிக்க மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில், ஆட்சியில் உள்ள காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள திமுக, மக்களை ஏமாற்றி வருகிறது. 50 ஆண்டுகளாக தமிழ், தமிழ் என மக்களுக்கு துரோகம் செய்தனர். அது இதுவரை தொடர்கிறது. இன்னும் தொடர வேண்டுமா? ஸ்டாலினை முதலில் கட்சியை காப்பாற்ற சொல்லுங்கள். 67 ஆண்டுக்கு முன்னர், பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அவர்களால், மாநிலத்தில் வளர்ச்சியில்லை. பா.ஜ., ஆட்சியில் இருந்திருந்தால், தமிழகம் உலகத்தின் சிறந்த மாநிலமாக மாறியிருக்கும். ராஜாஜி, காமராஜ் உள்ளிட்டோரின் தன்னிகரில்லா ஆட்சியாலும், அவர்கள் அமைத்த அடித்தளம் தான் வளர்ச்சிக்கு காரணம். இவ்வளவு காலம் இது தாக்குப்பிடித்தது. இனிமேலும் தாக்குப்பிடிப்பது சந்தேகம் தான். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yila - Nellai,இந்தியா
06-டிச-201819:14:44 IST Report Abuse
yila விவாதிக்க வேண்டியது மோடியுடன்.... ஸ்தாலீனா பிரதமர்?
Rate this:
Share this comment
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
06-டிச-201818:11:19 IST Report Abuse
K. V. Ramani Rockfort உண்மை என்றால் தி.மு.க.வுக்கு ஒவ்வாதெ
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
06-டிச-201817:18:20 IST Report Abuse
தேச நேசன் ஆய்வறிக்கை தயாரிக்க மறுத்தால் கோர்ட் மூலம் அனுமதி எளிதாகக் கிடைக்கும் . சட்டதை மீறுவது என என்றைக்கோ முடிவு செய்துவிட்ட கர்நாடகா காங்கிரஸ் அனுமதியே கொடுத்திராவிட்டாலும் அணையைக் கட்டும் . கோர்ட்டைக்கூட மதித்ததில்லை .இதற்கு கருணாநிதி ஹேமாவதி கபினி அணைகளைக் கட்டவிட்டதே காரணம் அப்போது கொடுக்கப்பட்ட ஊக்கமருந்து இப்போதும் வீரியத்துடன் இருக்கிறது. முடிந்தால் சுடாலின் ராகுல் சோனியாவிடம் அணைகட்டினால் அவர்களுடன் கூட்டணியில்லை என மிரட்டலாமே ? அது சரி .நம் சமதள மாநிலத்தில் வேறு அணைக்கட்டிக் கொள்ள சாத்தியமில்லை .அதிக நீர் விட்டால் அதனை கடலுக்கே விடுகிறோம் .மத்திய அரசே கர்நாடகப்பகுதியில் இன்னொரு அணையைக்கட்டி மேலாண்மை செய்யக் கேட்கலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X