சதம் விளாசினார் புஜாரா | Dinamalar

சதம் விளாசினார் புஜாரா

Added : டிச 06, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Adelaide test, Australia vs India, IND VS AUS , Pujara century, அடிலெய்டு டெஸ்ட், ஆஸ்திரேலியா, இந்தியா, புஜாரா சதம், ஆஸ்திரேலியா vs இந்தியா,  டெஸ்ட் கிரிக்கெட், கோஹ்லி,  புஜாரா, கிரிக்கெட், 
Cricket, Australia, India,  Test cricket, Kohli, Pujara,

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் விளாசினார் இந்திய அணியின் புஜாரா.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் துவங்கியது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. எதிர்பார்த்த படியே ஸ்டார்க், ஹேசல்வுட் இருவரும் பவுன்சர்களாக வீசி மிரட்டினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் ராகுல் 2 ரன் எடுத்தார். அடுத்து ஹேசல்வுட் வீசிய ஓவரில் ராகுல் (2) அவுட்டானார். ஹேசல்வுட் ஓவரில் இப்போட்டியின் முதல் பவுண்டரி அடித்தார் முரளி விஜய். இவர் 11 ரன்னுக்கு ஸ்டார்க் 'வேகத்தில்' வீழ்ந்தார்.

பெரிய நம்பிக்கையுடன் வந்த கோஹ்லி 3 ரன் எடுத்த போது, கவாஜாவின் 'சூப்பர்' கேட்ச் காரணமாக திரும்பினார். அடிலெய்டு மைதானத்தில் ஒற்றை இலக்க ரன்னில் இவர் அவுட்டானது இது தான் முதன் முறை. ரகானே, புஜாரா இணைந்து அணியை எப்படியும் சரிவில் இருந்து மீட்பர் என நம்பப்பட்டது. ஹேசல்வுட் பந்தில் பவுண்டரி அடித்தார் புஜாரா. மறுபக்கம் லியான் பந்தை சிக்சருக்கு விரட்டி ஆறுதல் தந்தார் ரகானே. கடைசியில் இவரும் 13 ரன்னுக்கு அவுட்டாக இந்திய அணி 41 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை பறி கொடுத்து தள்ளாடியது. அடுத்து வந்த ரோகித் 37, ரிஷாப் 25 ரன்கள் எடுத்தனர். புஜாரா அரைசதம் அடித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இவர் டெஸ்ட் அரங்கில் 16வது சதம் எட்டினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்திருந்தது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.AJINS - CHENNAI,இந்தியா
06-டிச-201817:59:25 IST Report Abuse
S.AJINS இந்தியா எளிதில் வெல்லும் . 250 பாதுகாப்பான ஸ்கோர் தான் . 2 ஆவது இன்னிங்ஸ் இல் 350 ரங்களுக்குள் மேல் எடுத்தால் போதும் . முதல் இன்னிங்ஸ் இல் ஆஸ்திரேலியா 150 ரங்களுக்குள் all அவுட் ஆகி விடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X