அமித் ஷா ரத யாத்திரை; கோல்கட்டா ஐகோர்ட் அனுமதி மறுப்பு| Dinamalar

அமித் ஷா ரத யாத்திரை; கோல்கட்டா ஐகோர்ட் அனுமதி மறுப்பு

Added : டிச 06, 2018 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அமித் ஷா,ரத யாத்திரை,கோல்கட்டா,ஐகோர்ட்,அனுமதி மறுப்பு

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் அமித் ஷாவின் ரத யாத்திரைக்கு கோல்கட்டா ஐகோர்ட் அனுமதி மறுத்துள்ளது.

2019 லோக்சபா தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் 3 நாட்கள் ரத யாத்திரை நடத்த பா.ஜ., திட்டமிட்டது. நாளை(டிச.,07) கூச்பெகரில் இந்த யாத்திரை துவங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்குவங்க அரசு இதற்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து பா.ஜ., சார்பில் கோல்கட்டா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த ஐகோர்ட், ரத யாத்திரை நடத்தினால் சமூக அமைதி கெடும் எனக்கூறி மாநில அரசு தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக உத்தரவிட்டனர். இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக பா.ஜ., அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201820:02:02 IST Report Abuse
Pasupathi Subbian பங்களாதேஷ் இஸ்லாமியருக்கு ஷாவை கண்டால் பிடிக்காது. இந்திய ஹிந்துக்கள் மேற்குவங்காளத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்பது கொள்கை. எப்படி காஷ்மீரிய பண்டிட்டுகளை வெளியேற்றி , அங்கே பாகிஸ்தானியர்கள் குடிவந்து , இப்போது போராட்டம் நடத்துகிறார்களா , அதுபோல மேற்குவங்காளத்திலும் நடைபெறவேண்டும். அதுதான் கொள்கை.
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
07-டிச-201811:10:04 IST Report Abuse
GB.ரிஸ்வான் அது என்ன பாஜக ஆளாத மாநிலங்களில் மட்டும் ர(த்)தா யாத்திரை,பேரணி அது இது என ... பாஜக வின் ஆட்டம் முடியும் நேரம்
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
07-டிச-201810:45:20 IST Report Abuse
ஜெயந்தன் கோர்ட் அனுமதி மறுத்தது மிக சரியே.... இவர்கள் " யாத்திரை" என்றாலே மக்களுக்கு அது பேதி மாத்திரை தான்...எப்படி கோர்ட் " பந்த்" என்ற கொடூரத்தை தடை செய்ததோ அது போல அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எல்லா யாத்திரையையும்.. எந்த மதமாக இருந்தாலும்.எந்த கட்சியாக இருந்தாலும்...தடை செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X