India inks pact with Iran to pay crude bill in rupee | இந்திய ரூபாய்க்கு கச்சா எண்ணெய்; ஈரான் - இந்தியா புதிய ஒப்பந்தம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்திய ரூபாய்க்கு கச்சா எண்ணெய்; ஈரான் - இந்தியா புதிய ஒப்பந்தம்

Added : டிச 06, 2018 | கருத்துகள் (50)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
India,Iran,crude bill,rupee,

புதுடில்லி : இந்திய ரூபாயை செலுத்தி கச்சா எண்ணெய் வாங்கும் புதிய ஒப்பந்தம் ஈரான் - இந்தியா இடையே கையெழுத்தானது.


மிரட்டல்:

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியவுடன், அந்நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. ஈரானிலிருந்து பிற நாடுகள், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவ.,4க்குள் நிறுத்த வேண்டும் எனவும் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.


சம்மதம்:

எனினும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்தது. இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட எட்டு நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய, அமெரிக்கா சம்மதித்தது.


ஒப்பந்தம்:

இந்நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை அமெரிக்க டாலராக செலுத்தாமல், இந்திய ரூபாயை செலுத்த இந்தியா - ஈரான் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி, கச்சா எண்ணெய்க்கு தர வேண்டிய தொகையை பாதியளவு பொருட்களை ஏற்றுமதி செய்தும், மீதித்தொகையை ரூபாயாகவும் இந்தியா செலுத்த உள்ளது. ஈரான் தேசிய கச்சா எண்ணெய் கழகத்தின் யூகோ வங்கி கணக்கில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும் எனுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாலருக்கு பதிலாக ரூபாயை செலுத்த இருப்பதால் இந்தியாவின் அந்நியச் செலவாணி கையிருப்பு குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201819:58:28 IST Report Abuse
Pasupathi Subbian இந்தியாவில் மாற்று மதத்தவர் வாழவே முடியவில்லை. மோடி கெட்டவர். சோனியா நல்லவர், ஸ்டலின் ரொம்ப நல்லவர் புத்திசாலி. அதைவிட இருபத்துரூவா டோக்கன் கொடுத்த தினகரன் அதிநல்லவர்.
Rate this:
Share this comment
Cancel
chander - qatar,கத்தார்
07-டிச-201818:40:33 IST Report Abuse
chander அவனும் ஒரு பொருளை வாங்கிவிட்டு ஈரான் ரூபாய் தருவான் அத நம்ம கஜானாவில் மட்டும் தான் வைக்க முடியும் எங்கேயும் விலைபோகாது
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
07-டிச-201813:11:32 IST Report Abuse
N.Purushothaman விஷயமே தெரியாமல் தமிழியன்ஸ் கம்பு சுத்தறதை பார்த்தால் நல்ல தமாஷா இருக்கி....சுடலை என்னடான்னா புல்லே மொளைக்கலை தாமரை எப்படி மலரும்ன்னு ஏதோ தாமரை புல்லுல மொளைக்கற மாதிரி பேசிக்கினு திரியுது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X