மேகதாது பிரச்னையில் தமிழக கட்சிகள் ஒற்றுமை! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மேகதாது,பிரச்னை,தமிழக கட்சிகள்,ஒற்றுமை,தீர்மானம், பிரதமர்,மோடி,முதல்வர்,பழனிசாமி,கடிதம்

சென்னை : மேகதாது அணை பிரச்னையில் தமிழக அரசியல் கட்சிகள் ஒற்றுமையுடன் நின்று தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரித்தன. இதையடுத்து கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்தும் அதற்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதியை ரத்து செய்யவும் வலியுறுத்தி சட்டசபையில் நேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில், 5,912 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அணை கட்டுவதற்கு, கர்நாடக அரசு முடிவெடுத்து உள்ளது. இதற்கு, விரிவான திட்ட அறிக்கை மற்றும் வரைபடம் தயாரிப்பதற்கு, மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இது, தமிழக விவசாயிகள், பொது மக்கள் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு கூட்டம் :


தமிழக எதிர்க்கட்சிகள், இப்பிரச்னையை கையில் எடுத்து, போராட்டங்களில் இறங்கியுள்ளன. இந்த சூழ்நிலையில், சட்டசபையின் சிறப்பு கூட்டம், நேற்று மாலை 4:00 மணிக்கு கூடியது. சபாநாயகர் தனபால், திருக்குறளை வாசித்து, கூட்டத்தை துவங்கினார். சட்டசபையின், 33வது விதியை தளர்த்தி, அரசு தீர்மானத்தை, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என, சபை முன்னவரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து, மேகதாது அணை பிரச்னையில், கர்நாடக அரசுக்கு கண்டனம்

தெரிவிக்கும் தீர்மானத்தை, முதல்வர் பழனிசாமி முன்மொழிந்தார்.

தீர்மானம் வருமாறு:


சட்டசபையில், 2014 டிச., 5 மற்றும், 2015 மார்ச், 27ல், 'கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்டக் கூடாது' என்று, ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பணிகள் துவக்கம் :


இந்த தீர்மானங்களை கருத்தில் கொள்ளாமலும், 'காவிரி படுகையின் கீழ் உள்ள மாநிலங்களின் அனுமதி பெறாமல், எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது' என்ற, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி, கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான, ஆரம்ப கட்ட பணிகளை துவக்கி உள்ளது. இதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கு, கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம்.

மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதியை திரும்ப பெறுவதற்கு, மத்திய நீர்வள அமைச்சகம், உடனடியாக உத்தரவிட வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில், கர்நாடக அரசோ அல்லது அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களோ, தமிழகத்தின் அனுமதியின்றி, எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று, கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

வேண்டுகோள் :


தீர்மானத்தை ஆதரித்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபையில் ஏற்கனவே, இப்பிரச்னை தொடர்பாக, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து, இரண்டு முறை தீர்மானங்களை நிறைவேற்றினோம்; அதை, அவர்கள் மதிக்கவில்லை. தமிழக உரிமைகளை மதிக்க முன்வரவில்லை.

இந்த தீர்மானத்தை நிறைவேற்றும் போது, அதற்கும் பலன் கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.
இந்த தீர்மானத்தை, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நிறை வேற்றி இருந்தால் உயிரோட்டமாக இருந்திருக்கும். இருந்தாலும், தமிழக நலன் கருதி, இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
அவரை தொடர்ந்து, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி, முஸ்லிம் லீக் - அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி - தமீமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை - தனியரசு, அ.ம.மு.க., - தினகரன் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்து பேசினர். எந்த எதிர்ப்பும் இன்றி, தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் வாயிலாக, மேகதாது அணை பிரச்னையில், தமிழக அரசியல் கட்சிகள், ஒற்றுமையை நிலைநாட்டியுள்ளன.

மேகதாது தீர்மானம்: பிரதமருக்கு கடிதம்

'தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கர்நாடகாவை அனுமதிக்க கூடாது' என பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்துடன் தமிழக சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தையும் இணைத்து முதல்வர் அனுப்பியுள்ளார். மேலும் 'காவிரி படுகையில் கர்நாடக அரசு மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்கள் தமிழகத்தின் அனுமதியின்றி எந்தவொரு கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்' என கடிதத்தில் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (49+ 55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AnandaRajan - Singapore,சிங்கப்பூர்
07-டிச-201821:12:36 IST Report Abuse

AnandaRajanஒரே ஒரு கேள்விக்கு முதலில் பதில் கூறுங்கள். தமிழகத்தில் அணை கட்டவே மாட்டீர்களா??

Rate this:
Adhulya adhul - tamilnadu,இந்தியா
07-டிச-201817:14:08 IST Report Abuse

Adhulya adhulதமிழக அரசு என்றும் விவசாயத்திற்கு கை கொடுக்கும்

Rate this:
Darunika - chennai,இந்தியா
07-டிச-201817:01:14 IST Report Abuse

Darunikaதமிழக உரிமைகளை ஒருபோதும் விட்டு கொடுக்க கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது

Rate this:
மேலும் 46 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X