ஆதாரை ஒப்படைக்க வசதி; அறிமுகப்படுத்த அரசு முடிவு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ஆதாரை ஒப்படைக்க வசதி
அறிமுகப்படுத்த அரசு முடிவு

புதுடில்லி : ஆதார் எண்ணை அரசிடம் ஒப்படைத்து, தங்களை பற்றிய தகவல்களை நீக்கும்படி, பொதுமக்கள் கோரும் வசதியை, விரைவில் அறிமுகம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

ஆதார்,ஒப்படைக்க,வசதி,அறிமுகப்படுத்த,அரசு,முடிவு


தகவல்கள் :


ஆதார் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. அதில், 'அரசு தொடர்பான பணிகள், மானியங்கள் பெறுவது போன்றவற்றுக்கு மட்டுமே, ஆதாரை

கட்டாயமாக்க வேண்டும். 'மொபைல் போன் இணைப்பு, வங்கிக் கணக்கு துவக்குவது போன்ற தனியார் அளிக்கும் சேவைகளுக்கு, ஆதார் கட்டாயமில்லை' என, கூறப்பட்டது.

இதற்கிடையே, ஆதார் எண்ணால், தங்களை பற்றிய தனிப்பட்ட விபரங்கள் வெளியில் கசிவதாகவும், தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், ஒரு தரப்பினர் கூறி வந்தனர். இதையடுத்து, ஏற்கனவே ஆதார் எண்ணை பெற்றவர்கள், அதை அரசிடம் ஒப்படைத்து, தங்கள் தகவல்களை நீக்கும்படி கோரும் வசதியை அளிப்பது குறித்து, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக, சட்ட அமைச்சகம், தன் பரிந்துரையை அளித்துள்ளது. அதனால், விரைவில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

'பான் கார்டு' :


அதே நேரத்தில், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான, 'பான் கார்டு' பெறுவதற்கு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, ஆதார் கட்டாயம் என்பதால், பான் கார்டு பெற்றவர்கள், தங்கள் ஆதாரை திருப்பித் தர முடியாது.அதேபோல், அரசு அளிக்கும் மானியம் உள்ளிட்டவற்றை பெறுவதற்கும் ஆதார் கட்டாயம் என்பதால், ஆதாரை திருப்பித் தந்தால், இந்த வசதிகள் கிடைக்காது.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-டிச-201819:24:18 IST Report Abuse

Pugazh Vசில பாஜக ஆதரவு வாசகர்கள் மதவெறி பிடித்து அலைகிறார்கள். வன்மம் விஷம் கக்குகிறார்கள். அவர்களின் கூட்டம் கை தட்டிக் கொள்கிறது. இவர்கள் எல்லோரும், இப்படி மதவெறி, ஜாதிவெறி, மொழிவெறி இனவெறி களைத் தூண்டி விட்டு வீட்டுக்குள்ளேயே பத்திரமாக இருந்து கொள்வார்கள். ஆனால் இதைப் பார்த்து வன்முறை யில் சிலர் இறங்கி போலீசாரால் தடியடி வாங்கி சாவார்கள்.

Rate this:
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
07-டிச-201819:17:17 IST Report Abuse

தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்//வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு, ஆதார் கட்டாயம் என்பதால், பான் கார்டு பெற்றவர்கள், தங்கள் ஆதாரை திருப்பித் தர முடியாது// அதாவது நேர்மையாக வரி கட்டி கொண்டிருப்போர் அனைத்து விபரங்களையும் அரசிடம் தர வேண்டும்.. வரிஏய்ப்பு செய்து கொண்டிருப்போர் எந்த விபரமும் தர தேவை இல்லை.. நல்ல நியாயம்.. .

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-டிச-201813:20:19 IST Report Abuse

Pugazh Vவிரும்பாதவர்கள் ஆதார் கார்டை வைத்துக் கொள்ளலாம். ஒட்டுமொத்த மாக எல்லோரும் திருப்பி கொடுக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X