விவசாயிகள் பேரணியில் அரசியல் ஆதாயம்! எதிர்க்கட்சிகள் மீது பா.ஜ., குற்றச்சாட்டு Dinamalar
பதிவு செய்த நாள் :
விவசாயிகள் பேரணியில் அரசியல் ஆதாயம்!
எதிர்க்கட்சிகள் மீது பா.ஜ., குற்றச்சாட்டு

டில்லியில் நடந்த விவசாயிகள் பேரணியை பெரிதுபடுத்தி, எதிர்க் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக, பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.

விவசாயிகள் பேரணி,அரசியல் ஆதாயம்,எதிர்க்கட்சிகள்,பா.ஜ., குற்றச்சாட்டு


உத்தர பிரதேச மாநிலம், பதோஹி தொகுதியைச் சேர்ந்த, லோக்சபா, எம்.பி.,யும், பா.ஜ., விவசாயிகள் அமைப்பின் தலைவருமான, விரேந்திர சிங், டில்லியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விவசாயிகள் நலனுக்காக, வேறெந்த அரசும் செய்யாத அளவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய, பா.ஜ.,

அரசு, பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. விவசாயிகள், சமீபத்தில், டில்லியில் பேரணி நடத்தினர்.

இதை, விவசாயிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கவும் நடத்திய பேரணியாகத் தான் பார்க்க வேண்டும்; ஆனால், எதிர்க்கட்சிகள் இதை தங்களுக்கு சாதகமாக்கி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில், விவசாயிகள் பிரச்னை குறித்தும், அதை சரி செய்ய தேவையான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில், இதுவரை எந்த அரசும் செய்யாத வகையில், 52 சதவீதம், விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தான், விவசாயிகள் மீது, பா.ஜ., அரசு வைத்துள்ள அக்கறைக்கு சிறந்த சான்று.

Advertisement



பருவநிலை மாற்றம், வறட்சி, அதிக விளைச்சல் உள்ளிட்ட பல காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அது போன்ற நேரங்களில், அவர்களை பாதிப்பிலிருந்து மீட்க உரிய நடவடிக்கை எடுக்கும் படி, பா.ஜ., விவசாயிகள் அமைப்பின் சார்பில், மத்திய அரசை வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
07-டிச-201811:03:25 IST Report Abuse

ganapati sbவாட்ஸப்பில் வந்த ஒரு நகைச்சுவை யாரும் பார்த்திராத மூன்று விஷயங்கள் 1 பெரியார் ஒழித்த சாதி 2 சீமான் சுட்ட அரிசிமணி குண்டு கொண்ட AK ரக துப்பாக்கி 3 விவசாய அய்யாக்கண்ணு செய்த விவசாயம்

Rate this:
RamRahimRobert - Bhakthas Nagaram,இந்தியா
07-டிச-201814:39:36 IST Report Abuse

RamRahimRobertநம்ம பகோடா கட்சி பற்றி சொல்ல வேண்டாம். நினைத்தாலே சிரிப்பு வரும்....

Rate this:
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
07-டிச-201809:32:46 IST Report Abuse

தமிழ் மைந்தன் அய்யாகன்னுவை அனுப்பிவைத்த ஊழல் கட்சிக்கு திண்டாட்டம்

Rate this:
RamRahimRobert - Bhakthas Nagaram,இந்தியா
07-டிச-201811:46:51 IST Report Abuse

RamRahimRobertநீங்க தானே டிக்கெட் வாங்கி குடுத்தீங்க....

Rate this:
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
07-டிச-201803:53:12 IST Report Abuse

கும்புடுறேன் சாமிவிவசாயிகள் பேரணியில் டிராமா ஆர்ட்டிஸ்ட் ஆடி கார் அய்யாக்கண்ணுக்குத்தான் ஆதாயம்

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X