அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ., 'சம்மன்'; குட்கா ஊழல் வழக்கில் திருப்பம் Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ., 'சம்மன்'
குட்கா ஊழல் வழக்கில் திருப்பம்

சென்னை : 'குட்கா' ஊழல் வழக்கில், விசாரணைக்கு ஆஜராகும்படி, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கருக்கும், அவரது தனி உதவியாளர், சரவணனுக்கும், சி.பி.ஐ., அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர்,சி.பி.ஐ.,சம்மன், குட்கா,ஊழல் வழக்கில்,திருப்பம்


ஆந்திராவைச் சேர்ந்தவர், மாதவ ராவ். சென்னை, அண்ணா நகரில் வசித்து வந்த அவர், செங்குன்றம் அருகே, சட்ட விரோதமாக, குட்கா ஆலை நடத்தி வந்தார். அதன் பங்குதாரர்களாக, சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் செயல்பட்டனர்.

சட்ட விரோத குட்கா விற்பனையை கண்டுகொள்ளாமல் இருக்க, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர், பி.வி.ரமணா உள்ளிட்டோருக்கு,

பல கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்தது.

மாதவ ராவ் உள்ளிட்டோரின் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர். அப்போது, 'ரகசிய டைரி' ஒன்று சிக்கியது. அதில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் அமைச்சர் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளுக்கு, லஞ்சம் தரப்பட்டதற்கான குறிப்புகள் இருந்தன. இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். பின், இந்த வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது.

சி.பி.ஐ., அதிகாரிகள், செப்., 5 - 6ல், விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணாவின் வீடுகள் உட்பட, 35 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதன்பின், உணவு பாதுகாப்பு துறை மற்றும் கலால் துறை அதிகாரிகள், செந்தில்முருகன், எம்.கே.பாண்டியன் மற்றும் மாதவ ராவ் உள்ளிட்ட, ஆறு பேரை கைது செய்தனர். அவர்களை, காவலில் எடுத்தும் விசாரித்தனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடத்த, சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இருவரும், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என, சம்மன் அனுப்பி உள்ளனர்.

Advertisement

'பதவியிலிருந்து உடனே நீக்குங்க!

'பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நேற்று வெளியிட்ட அறிக்கை: குட்கா ஊழலில், விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அவருக்கு எதிராக, வருமான வரித்துறை அறிக்கை அளித்துள்ளது மட்டுமின்றி, அவரது வீட்டில், அந்தத் துறை அதிகாரிகளும், சி.பி.ஐ., அதிகாரிகளும் சோதனை நடத்தி, ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இப்போது, விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக, சி.பி.ஐ., சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு பின்னும், விஜயபாஸ்கர் பதவியில் தொடருவதும், தொடர அனுமதிப்பதும் முறை தானா என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதிகார மமதையில் உள்ள முதல்வருக்கு, இது, கேட்டிருக்க வாய்ப்பில்லை. அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கரை, முதல்வர் பழனிசாமி உடனே நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (30+ 16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aish - chennai,இந்தியா
07-டிச-201817:04:12 IST Report Abuse

Aishகுற்றம் குற்றமே, யாராக இருந்தாலும் சரி சட்டத்தின் முன் ஒன்று தான்

Rate this:
Darunika - chennai,இந்தியா
07-டிச-201817:01:52 IST Report Abuse

Darunikaசில சமூகவிரோதிகளால் போடப்பட்ட பொய் வழக்கு நிச்சியம் தள்ளுபடியே செய்யப்படும்

Rate this:
sathy - chennai,இந்தியா
07-டிச-201816:57:41 IST Report Abuse

sathyஎந்த ஆதாரத்தை வச்சு இப்படி எல்லாம் பேசிக்கிட்டு வர்றிங்க

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X