சபரிமலைக்கு 40 தமிழக பெண்கள்; கேரள போலீஸ் அறிக்கையால் அதிர்ச்சி Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சபரிமலைக்கு 40 தமிழக பெண்கள்
கேரள போலீஸ் அறிக்கையால் அதிர்ச்சி

சபரிமலை : சபரிமலைக்கு தமிழக பெண்கள் 40 பேர் ஒரு அணியாக வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து எருமேலி, நிலக்கல், பம்பையில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

சபரிமலை,40 தமிழக பெண்கள்,கேரள போலீஸ்,அறிக்கை,அதிர்ச்சி


சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் எதிர்பார்த்த அளவு பெண்கள் வரவில்லை. ஐப்பசி மாத பூஜையில் 15 பெண்களும், சித்திரை ஆட்ட

திருநாளில் ஒருவரும், மண்டல காலம் தொடங்கிய பின்னர் ஆந்திராவில் இருந்து இரண்டு பெண்களும் வந்து திரும்பி சென்றுள்ளனர்.

இதனால் நடந்த போராட்டங்கள் சபரிமலையை பாதிக்க செய்துள்ள நிலையில் போலீசும் போராட்டக்காரர்களும் தங்கள் நிலை பாட்டை சற்று தளர்த்தியுள்ளனர். இதனால் சன்னிதானத்தில் கூட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கேரள போலீஸ் ஏ.டி.ஜி.பி. அனில்காந்த் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் இருந்து 40 பெண்கள் மொத்தமாக வருவதாகவும், இவர்கள் எருமேலி பள்ளி வாசலுக்கு வந்த பின்னர் அங்கிருந்து சபரிமலை வர திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக இந்து அமைப்பின் மாநில தலைவர் மற்றும்

Advertisement

திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆகியோர் இவர்களை அழைத்து உள்ளனர்.

இதுபோல மேலும் சில இந்து அமைப்புகள் பெண்களை அழைத்து வர உள்ளது. சபரிமலை வருவதோடு எருமேலி வாவர் பள்ளி வாசலையும் இதில் இழுப்பது நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கும் என்பதால் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nisha Rathi - madurai,இந்தியா
08-டிச-201809:40:55 IST Report Abuse

Nisha Rathiதமிழக இந்து அமைப்பின் மாநில தலைவர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தலைவர் இவர்களுடைய பெயர்கள் ஏன் வெளியிடவில்லை இப்படி ஒரு அமைப்பு இல்லை இது பினராயின் திட்டமிட்ட சதிவேலை அப்படி இருந்தால் திருவள்ளூர் மாவட்ட பொதுமக்கள் தடுத்து நிறுத்துவார்கள் இவர்களை உடனடியாக யார் என்று கண்டுபிடித்து தடுத்துநிறுத்தவேண்டும் வேரோடு இருக்கவேண்டும்

Rate this:
jagan - Chennai,இந்தியா
07-டிச-201819:40:38 IST Report Abuse

jaganஇவர்கள் தம்பி மோகன் சி லாசரஸ் கூட்டத்தை சேர்ந்தவர்கள்....

Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201818:57:18 IST Report Abuse

Pasupathi Subbianமெரினா பீச்சில் தொழில் செய்பவர்கள் கூட தன்மானம் உள்ளவர்கள். இவர்களில் உண்மையான இந்துக்கள் கூட வரவே மாட்டார்கள். ஏதாவது கழிசடைகளை காசு கொடுத்து கூட்டிவந்தால்தான் உண்டு. அது சரி தமிழக இந்து தலைவர் ... யார் ? அப்படி யாரையும் தமிழக ஹிந்துக்கள் தேர்ந்தெடுக்கவில்லையே . தேர்தலுக்கு தேர்தல் லெட்டர் பேட் அடிப்பவர்களில் கூட இந்த பெயரை நாம் அறிந்ததில்லையே

Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X