வழக்கறிஞர்களுக்கு அரசு ரூ.10.48 கோடி பாக்கி Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பாக்கி!
வழக்கறிஞர்களுக்கு அரசு
ரூ.10.48 கோடி பாக்கி

உச்ச நீதிமன்றத்தில், பல்வேறு வழக்குகளில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர்களுக்கு, தமிழக அரசு, 10.48 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.

வழக்கறிஞர்களுக்கு,தமிழக அரசு,ரூ.10.48 கோடி,பாக்கி


தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. இதில், அரசுக்கு எதிராக அமையும் உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். இந்த மேல்முறையீட்டு

மனுக்கள் விசாரணைக்கு வரும் போது, ஆஜராவதற்கென வழக்கறிஞர்கள் குழு உள்ளது.

இருப்பினும், சில வழக்குகளின் முக்கியத்துவம் கருதி, மூத்த வழக்கறிஞர்கள் வெளியில் இருந்து நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்களுக்கு, சம்பந்தப்பட்ட வழக்கில், தொடர்புடைய துறைகளில் இருந்து, கட்டணங்கள் வழங்கப்படும். தமிழக அரசு, மூத்த வழக்கறிஞர்கள் பலருக்கு உரிய கட்டணத்தை தராமல், பாக்கி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 10.48 கோடி ரூபாய் வரை, நிலுவை வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல், சமீபத்தில், தலைமை செயலகத்தில் நடந்த, அனைத்து துறை செயலர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

நிலுவை கட்டணத்தை உடனடியாக செலுத்தும்படி, சம்பந்தப்பட்ட துறை செயலர்களுக்கு, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாயிலாக அமர்த்தப்படும், வழக்கறிஞர்களுக்கான, 80 லட்சம் ரூபாய் நிலுவை தொகையையும் கொடுக்கும்படி தெரிவித்து உள்ளார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
07-டிச-201810:06:28 IST Report Abuse

Chanemougam Ramachandiraneதேவையில்லாத வசகுகளை அரசியல் வசகுகள் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து மக்கள் வரி பணம் தான் வீனாகிறது உச்ச நீதிமன்றம் அரசு என்கிற பெயரால் தவறான வசக்கு வந்தால் வக்கீல்களுக்கு அந்த நபர் தான் கொடுக்கணும் அதுவும் எவ்வளவு என்று முதலில் வரையறுக்கணும் ஒவ்வுறு நீதிமன்றத்திற்கும் தகுந்தாற் போல் நாட்டில் நடக்கும் வசகுகளுக்கு உச்ச நீதிமன்றம் எவ்வளவு பீஸ் பேரனும் என்று வரையறுக்கணும் முதலில் அப்பாஸுது தான் வசக்காளிகள் சிரமப்படமாட்டார்கள் என்பதினை முதலில் உணர்ந்து வரையறுக்கணும் எவ்வளவு தொகை பேரனும் என்று அரசு பணம் விரயமாகாது

Rate this:
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
07-டிச-201809:09:45 IST Report Abuse

தமிழ் மைந்தன் வழக்கில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டால் இட ஒதுக்கீடு வழக்கறிஞர்கள் பட்டை நாமம்

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
07-டிச-201806:26:24 IST Report Abuse

Mani . Vஅதெல்லாம் நிலங்களாக, நகைகளாக, கட்டிடங்களாக எங்களிடம் (அரசியல்வாதிகளிடம்) பத்திரமாக இருக்கிறது.

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X