கருணாநிதி சிலை திறப்பு ரஜினி, கமலுக்கு அழைப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி சிலை திறப்பு ரஜினி, கமலுக்கு அழைப்பு

Added : டிச 07, 2018 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
  கருணாநிதி சிலை திறப்பு  ரஜினி, கமலுக்கு அழைப்பு

மறைந்த தலைவர்கள் அண்ணாதுரை, கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க, நடிகர் ரஜினி, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமல் ஆகியோருக்கு, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

வரும், 16ம் தேதி, சென்னை, அறிவாலயத்தில், அண்ணாதுரை, கருணாநிதி சிலை திறப்பு விழா, ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர், சோனியா திறந்து வைக்கிறார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு, கேரள முதல்வர், பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

சிலை திறப்பு விழா முடிந்த பின், ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில், தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் பேசுகின்றனர். திரையுலகில், கருணாநிதியுடன் ரஜினி, கமல் இருவரும் நெருங்கி பழகியவர்கள். எனவே, அவர்களும், சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என, ஸ்டாலின் விரும்பினார்.அதன்படி, நேற்று முன்தினம், கமலுக்கும், நேற்று ரஜினிக்கும், தி.மு.க., தரப்பில், அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
07-டிச-201819:27:54 IST Report Abuse
bal நாட்டுல இருக்கிற சிலைகள் போதாதா....ஜெயா சிலை, சர்தார் சிலை, இப்போது கட்டுமரம் சிலை....எப்போதுதான் இந்த நாடு உறுப்படுமோ
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
07-டிச-201815:42:58 IST Report Abuse
Endrum Indian ஏம்பா அன்னக்கி என்னவோ உளறினேயே??ஒரு உயிரற்ற சிலைக்கு எதுக்கு இவ்வளவு டம் டம் டமாரம் என்றாயே சார்த்தர் வல்லபாய் படேல் சிலை திறப்பை பார்த்து???அப்போ ஒன அப்பன் சிலை மட்டும் உயிருள்ள சிலையா???அதுக்கு எதுக்கு இவ்வளவு டப்பா அடிக்கிறே???ஒனக்கு வந்தா அது ரத்தம், மற்றவனுக்கு வந்தா அது டொமட்டோ கெட்சப், அப்படித்தானே.
Rate this:
Share this comment
RamRahimRobert - Bhakthas Nagaram,இந்தியா
08-டிச-201801:16:40 IST Report Abuse
RamRahimRobertகடுகுக்கும் பலாப்பழம் வித்தியாசம் தெரியாது போல....
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201815:32:39 IST Report Abuse
Bhaskaran அந்த சிலை கருணாநிதிபோல் இல்லாமல் லொள்ளுசபா மனோஹர்ப்போல் இருப்பதாக காணொளியில் போட்டு வாங்குகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X