முறை ஏவப்பட்ட ஒரே ராக்கெட் பாகம்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

முறை ஏவப்பட்ட ஒரே ராக்கெட் பாகம்!

Added : டிச 07, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
முறை ஏவப்பட்ட ஒரே ராக்கெட் பாகம்!

அமெரிக்காவின் தனியார் விண்வெளி அமைப்பான 'ஸ்பேஸ் எக்ஸ்,' தனது பால்கன் 9 ராக்கெட்டின் உந்தும் பகுதியை, மூன்றாவது முறையாகப் பயன்படுத்தியது. கடந்த மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதே ராக்கெட்டை உந்தும் அடிப் பகுதியை பயன்படுத்தியது.
கடந்த, 3ம் தேதி அமெரிக்காவின் வாண்டன்பர்க் விமானப் படைத்தளத்திலிருந்து கிளம்பும்போது, பால்கன் 9ன் உந்தும் பகுதி பார்க்கப் பரிதாபமாக, கரி பூசப்பட்டிருந்தது. ஆனால், 64 சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் சுழலவிட்டு, வெற்றிகரமாக பசிபிக் கடலில், ஒரு மிதவை மேடை மீது துல்லியமாக வந்திறங்கியது.
ராக்கெட்டுகளின் பகுதிகளை பலமுறை பயன்படுத்தப் போவதாக எஸ்பேஸ் எக்சின் அதிபர் எலான் மஸ்க் சொல்லி வருகிறார்.
அதன்படி, பால்கனின், 42.33 கோடி ரூபாய் விலை கொண்ட பெரிய மூக்குப் பகுதியையும் மறுபயன் செய்ய கடந்த சில ஏவுதல்களின் போது ஸ்பேஸ் எக்ஸ் முயன்றது. ஆனால் வெற்றி கிட்டவில்லை. இந்த முறையும், கடலில் விரித்த வலையுடன் 'மிஸ்டர். ஸ்டீவன்' என்ற சிறிய கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், பால்கன் மூக்கு வலைக்குள் விழாமல், தள்ளிப் போய் கடலில் விழுந்தது.
'வலையை தவறவிட்டுவிட்டது. ஆனால் நீரில் மெதுவாக இறங்கியது' என்று டுவிட்டரில் தெரிவித்தார் மஸ்க். 'அதை உலர்த்தி, மீண்டும் பயன்படுத்துவதுதான் திட்டம். சற்று நீச்சலடித்ததில் தவறில்லை' என்று அவர், 'டுவிட்' செய்தார்.
கடலின் உப்பு நீர், ராக்கெட் மூக்கினுள் இருக்கும் மின்னணு பகுதிகளை பழுதாக்கக்கூடும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் மஸ்க் விடுவதாக இல்லை. அதை மீண்டும் பயன்படுத்த முயற்சிப்போம் என்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
12-டிச-201819:19:55 IST Report Abuse
அம்பி ஐயர் அற்புதம்.... எல்லாம் முயற்சியும் கடின உழைப்பும்தான்....
Rate this:
Share this comment
Cancel
mariyappangopinathan - Chennai,இந்தியா
12-டிச-201813:58:26 IST Report Abuse
mariyappangopinathan நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X