விரைவில் நாட்டின் அதிவேக ரயில் அறிமுகம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விரைவில் நாட்டின் அதிவேக ரயில் அறிமுகம்

Added : டிச 07, 2018 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ரயில் 18, அதிவேக ரயில், பியூஸ் கோயல்

புதுடில்லி : இந்தியாவின் முதல் அதிவேக ரயில், விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ரயிலின் சோதனை ஓட்ட வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.

மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடிய இந்த அதிவேக ரயிலுக்கு, 'ரயில் 18' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் சமீபத்தில் ராஜஸ்தானின் கோடா - சவல் மதோபூர் பகுதிகள் இடையே நடைபெற்றது. 2019 ம் ஆண்டு ஜனவரியில் இந்த ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும், பொதுவாக 3 மாதங்கள் எடுத்துக் கொள்ளப்படும் ரயில் சோதனை ஓட்டப்பணிகள் தற்போது எதிர்பார்த்ததை விட வேகமாக முடிந்து விட்டதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அதிவேக ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

'ரயில் 18' ரயிலில் டிரைவர் பெட்டி உள்ளிட்ட 16 க்கும் அதிகமான பெட்டிகள் உள்ளது. டிரைவர் பெட்டியில் 44 இருக்கைகளும், மற்ற பெட்டிகளில் 78 இருக்கைகளும் உள்ளன. மாற்று திறனாளிகளுக்காக 2 கழிவறைகளும், குழந்தைகள் பராமரிப்பிற்காக சிறப்பு உணவக வசதியுடனான தனி பகுதியும் இந்த ரயிலில் அமைக்கப்பட்டுள்ளது. தண்டவாளம் மற்றும் ரயில் நிலைய நடைபாதையில் பயணிகளின் செயல்பாட்டை கண்காணிக்கும் வகையில் டிரைவர் பெட்டியில் 2 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ரயிலை எளிதில் திருப்பும் வகையில் இரு முனைகளிலும் டிரைவர் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன பிரேக் முறை பொருத்தப்பட்டுள்ளதால் அதிக அளவு மின்சாரம் சேமிக்கப்படுகிறது. இந்த ரயில் முழுவதும் குளிர்சாதன வசதியும், பயணிகளின் பாதுகாப்பு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் மற்றொரு 'ரயில் 18' பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாகவும், அடுத்த நிதியாண்டில் 4 'ரயில் 18' ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muttall - Chennai,இந்தியா
07-டிச-201818:01:48 IST Report Abuse
Muttall இது ஒரு சாதாரண ரயில் ஆக இருந்து குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும். எந்த ஒரு தொழில் நுட்பமும் சாதாரண மனிதனுக்கு உபயோகமாகும் முறையில் இருக்க வேண்டும். பணக்காரனுக்கு மட்டும் இருந்தால் அது வீணான முன்னேற்றமே. இந்த ரயிலை ஏன் குளிர் சாதன வசதி இல்லாத சாதாரண ரயிலாக தயாரிக்க கூடாது?
Rate this:
Share this comment
Cancel
Sanjay - Chennai,இந்தியா
07-டிச-201817:32:06 IST Report Abuse
Sanjay சென்னை மதுரை மற்றும் மதுரை சென்னை வழித்தடத்தில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட தேஜஸ் ரயில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது. காலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு நண்பகல் 1 மணிக்கு மதுரை சென்றடையும், மறு மார்க்ககமாக மதியம் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னை வந்தடையும்.இந்த ரயில் சி சி டிவி, ஒவ்வொரு இருக்கையிலும் எல் இ டி திரை, நவீன கழிப்பறை வசதிகள் கொண்டது. ரயில் டிக்கெட் சதாப்தியை விட கொஞ்சம் அதிகம் தான். விலை அதிகம் இல்லையென்றால் ஒரு குரூப் இவன் அவளை லவ் பன்றான், அவள் இவனை லவ் பன்றால் என்றும் மற்றும் அசிங்கமாக எழுதி ஒரு பொது சொத்தை நாறடித்து விடுவார்கள். அவர்களை இதில் இருந்து கழட்டி விடுவது மிகவும் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
07-டிச-201817:09:16 IST Report Abuse
Loganathan Kuttuva மின்மயமாக்கப்பட்ட பாதைகளில் தான் இந்த ரயில்களை இயக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X