இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 12.4 லட்சம் பேர் பலி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 12.4 லட்சம் பேர் பலி

Added : டிச 07, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இந்தியா, காற்று மாசுபாடு, உயிரிழப்புக்கள், புகை, ஆய்வறிக்கை

புதுடில்லி : இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக 2017 ம் ஆண்டில் 12.4 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில், பப்ளிக் ஹெல்த் பவுண்டேஷன் ஆஃப் இந்தியா உள்பட பல ஆய்வு நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆராய்ச்சிகளின் முடிவில், இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்தியாவில் 77 சதவீத மக்கள் தொகை காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், புகைபிடித்தலை விட மிக மோசமாக இந்தியாவில் 8 ல் ஒருவர் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்று மாசுபாட்டில் இந்தியா, சீனாவை மிஞ்சி வருவதாக கூறப்படுகிறது

கிழக்கு மற்றும் வட மாநிலங்களில் குறிப்பாக பீகார், உ.பி., ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநிலங்களில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் புகை மாசுக்களே அதிகம். வட இந்தியாவில் டில்லி, அரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் நாட்டிலேயே அதிக அளவு பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. இந்தியாவில் காற்று மாசு காரணமாக 26 சதவீதம் பேர் இளமையிலேயே உயிரிழக்கும் அபாய நிலை உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anil - BENGALURU,இந்தியா
07-டிச-201816:44:07 IST Report Abuse
Anil புகைபிடித்தல், வாகனப்புகை, தொழிற்ச்சாலை மாசு, இவையெல்லாம்விட கொடியது தெருக்களில் எரியூட்டப்படும் பிளாஸ்டிக் கலந்த குப்பைகளே
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
07-டிச-201816:16:36 IST Report Abuse
Siva ஐயோ பாவம். பணம் இருப்பவன் . பணம் சம்பாதிப்பவன் புலம்புகிறான்..அன்றாட வருமானத்தில் வாழ்பவனும். கிராமத்தானும் இதை பற்றி எல்லாம் நினைத்து பார்க்க கூட நேரம் இல்லாமல் அலைந்து(உழைத்து) கொண்டு இருக்கிறான். வாழ்க பாரதம்..
Rate this:
Share this comment
Cancel
Sivak - Chennai,இந்தியா
07-டிச-201815:57:38 IST Report Abuse
Sivak இந்த மாதிரி தான் தண்ணீரில் கிருமிகள் உள்ளன.. ஆபத்து, தண்ணீர் மாசினால் பல உயிர்கள் மடிகின்றன என பயம் காட்டி இப்போது தண்ணீர் வியாபாரம் பல ஆயிரம் கோடிகளை தாண்டி நடக்கிறது .. ஏமாந்தது பொது மக்கள் ... சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை ... காசு கொடுத்தால் தான் தண்ணீர் குடிக்க முடியும் என்று ஆகி விட்டது ... அதை போல இது ஒரு வியாபார தந்திரம் ... இப்படி பயம் காட்டி உனக்கு சுத்தமான காற்று கொடுக்கிறேன் .. அதை இதை செய்கிறேன் .. இன்று பல மெஷின்கள் வந்துள்ளன ... இந்த வியாபாரத்தை பெருக்கும் நோக்கில் செய்யப்பட்ட அயோக்கியத்தனம் தான் இந்த ஆய்வு ... பொது மக்கள் யோசித்து செயல் பட வேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X