அரசு டாக்டர்கள் போராட்டம் ஒத்திவைப்பு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரசு டாக்டர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

Added : டிச 07, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: சம்பள முரண்பாட்டை களைய வலியுறுத்தி அரசு டாக்டர்கள் நாளை முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதனை எதிர்த்து மதுரையை சேர்ந்த முகமது யூனிஸ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு அளித்த பதிலில், ஒருநபர் கமிஷன் பரிந்துரைகளை அளித்துள்ளது. பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. இதனையடுத்து தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அரசு டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து சுகாதார செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச.,17 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X