மம்தாவுக்கு பயம்: அமித்ஷா தாக்கு| Dinamalar

மம்தாவுக்கு பயம்: அமித்ஷா தாக்கு

Added : டிச 07, 2018 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பா.ஜ., பாஜ, அமித்ஷா, மம்தா, மேற்கு வங்கம்,மம்தா பானர்ஜி,

புதுடில்லி: பா.ஜ., அறிவித்த பேரணியை பார்த்து பயம் ஏற்பட்டதால் தான், அதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி தடை விதித்துள்ளதாக, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.


மேல்முறையீடு

2019 லோக்சபா தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் 3 நாட்கள் ரத யாத்திரை நடத்த பா.ஜ., திட்டமிட்டது. நாளை(டிச.,07) கூச்பெகரில் இந்த யாத்திரை துவங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்குவங்க அரசு இதற்கு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து பா.ஜ., சார்பில் கோல்கட்டா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட், ரத யாத்திரை நடத்தினால் சமூக அமைதி கெடும் எனக்கூறி மாநில அரசு தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு ரத யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக உத்தரவிட்டனர். இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக பா.ஜ., அறிவித்துள்ளது.


மக்கள் முடிவு

இது தொடர்பாக பா.ஜ., தலைவர் அமித்ஷா டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:மேற்கு வங்கத்தில், அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டு, ஜனநாயக நெறிமுறைகள் நசுக்கப்பட்டுள்ளன. முதல்வர் தொடர்ந்து இதனை கடைபிடித்து வருகிறார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. மேற்கு வங்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளால் மம்தாவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. தூக்கமும் தொலைந்துவிட்டது. இதனால் தான் அவர் யாத்திரையை தடுத்துள்ளார். ஆதரவு குறைந்து வருவதை கண்டு அவருக்கு ஏற்பட்டுள்ள பயத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதற்கு தீர்வு கிடையாது.

பா.ஜ.,வை ஆதரிப்பது என்பது மக்களின் முடிவு. இங்கு மாபியாக்கள் செயல்படுகின்றனர். அவர்களை மாநில அமைச்சர்கள் ஆதரிக்கின்றனர்.முன்னர், மாநிலத்தில் ரபிந்தரநாத்தின் பாடல்கள் கேட்டநிலையில், தற்போது குண்டு சத்தம் தான்கேட்கிறது. அனைத்து விஷயங்களையும் சட்டப்படி அனுமதி பெற்று யாத்திரை நடக்கும். யாத்திரை ரத்து செய்யப்படவில்லை. ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் யாத்திரை செல்லும். நாளை நான் மேற்கு வங்கம் செல்ல உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201819:31:01 IST Report Abuse
Pasupathi Subbian பங்களாதேஷ் முஸ்லிம்கள் இருக்கும்வரையில் இவருக்கு பயமே தேவையே இல்லை.
Rate this:
Share this comment
Tamil Selvan - Chennai,இந்தியா
08-டிச-201808:20:50 IST Report Abuse
Tamil Selvan"பங்களா பாய்"ஸ் இருக்க மமதாவுக்கு பயம் ஏன்?. பங்காளதேசிகள் கம்யூனிஸ்டுகளை கை விட்டு விட்டார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-டிச-201819:08:32 IST Report Abuse
Pugazh V நிச்சயமாக பயம் தான். அதான் சபரிமலை யில் பார்க்கிறோமே. "கோவிலுக்கு வரும் பெண்களை ரெண்டா வெட்டி தி.புரத்துக்கும் டில்லிக்கும் அனுப்பவோம் என்று கொல்லம் பாஹக மா.செ. துளசி கர்ஜித்தாரே..பயமாகத் தான் இருக்கிறது. ஆனால், "ஒரு மிரட்டலும் விடாத ராகுல்.காந்தியைப் பார்த்து உங்கள் மொத்த கட்சியுமே பயந்து நடுநடுங்குகிறதே.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-டிச-201817:49:21 IST Report Abuse
தமிழ்வேல் இவரை பார்த்துதான் பயந்திருக்கனும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X