தீ விபத்தில் பாதிப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் பாதிப்பு

Added : டிச 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிள்ளை: கூழையாரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.கிள்ளை அடுத்த கூழையார் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணசாமி. இவரது கூரை வீடு கடந்த சில தினங்களுக்கு முன் எரிந்து சேதமானது.தகவலறிந்த சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன், நேரில் சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, தன் சொந்த செலவில் நிவாரண உதவிகளை வழங்கினார். அரசு சார்பில் நிவாரண உதவி கிடைத்திட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய செயலர் அசோகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் சுந்தரமூர்த்தி, கணேசன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X