சுடுகாட்டு பாதை சேதம்: பொறியாளர் மீது புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுடுகாட்டு பாதை சேதம்: பொறியாளர் மீது புகார்

Added : டிச 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேத்தியாத்தோப்பு: மிராளூர் மணல் குவாரிக்காக சுடுகாட்டு பாதையை சேதப்படுத்தியதாக உதவி பொறியாளர் புகழேந்தி மீது தி.மு.க., ஊராட்சி செயலர் கணேசன், டி.எஸ்.பி., ஜவகர்லாலிடம் புகார் கொடுத்துள்ளார்.மனு விபரம்:மிராளூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் இன மக்கள் பரம்பரையாக பயன்படுத்தி வந்த கிராம சுடுகாட்டு சாலையை மணல் குவாரி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் சேதப்படுத்தி வெள்ளாற்றில் மணல் எடுப்பதற்காக பாதை அமைத்துள்ளார்.எங்கள் கிராம மக்கள் 60 ஆண்டு காலமாக மயானத்திற்குச் செல்ல இந்த பாதையை பயன்படுத்தி, வருகின்றோம் தற்போது குவாரிக்காக நாங்கள் பயன்படுத்தி வந்த சாலை எங்கள் கிராம மக்களின் அனுமதியில்லாமல் உதவி பொறியாளர் புகழேந்தி தான்தோன்றி தனமாக சேதப்படுத்தியுள்ளார்.மேலும், நாங்கள் பிணம் புதைத்த பகுதியில் ஜே.சி.பி., இயந்திரம் கொண்டு தோண்டி அப்புறப்படுத்தியுள்ளார்.இது குறித்து அவரிடம் கேட்டதற்கு எங்கள் கிராம மக்களையும் என்னையும் தரக்குறைவாக பேசி மிரட்டி வருகிறார்.எங்கள் கிராம சுடுகாட்டுப்பாதையை சேதப்படுத்திய மணல்குவாரி உதவி பொறியாளர் புகழேந்தி மீது வழக்குப்பதிந்து நடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X