விருதை அருகே சிறுமி பலாத்காரம் குழந்தைகள் நலக்குழு விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விருதை அருகே சிறுமி பலாத்காரம் குழந்தைகள் நலக்குழு விசாரணை

Added : டிச 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த 42 வயது திருமணமான நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர், சிறுமியை மீட்டு கடலுார் காப்பகத்தில் தங்க வைத்து, விசாரித்து வருகின்றனர்.இது குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் கூறுகையில், 'சிறுமி பலாத்காரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர் மீது 'போக்சோ' பிரிவில் நடவடிக்கை எடுக்க விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.அதுபோல், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த மற்றொரு சிறுமி, காதல் பிரச்னையால் வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளார். அவருக்கும் கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம். இதுபோன்ற செயல்களில் மாணவிகள் ஈடுபடுவது தவறு. மாணவிகள் கல்வியில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.பள்ளிக்குச் சென்று வரும் போதும், அவரவர் வீடு சார்ந்த பகுதியிலும் தேவையில்லாத நட்பை வளர்த்துக் கொள்ள வேண்டாம். பள்ளி ஆசிரியர்களும் இதுபோன்ற தவறான பாதையில் செல்லும் மாணவிகளை கண்டறிந்து உடனடியாக மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் தகவல் தெரிவிக்க வேண்டும். நாங்கள் அவர்களுக்கு முழு ஆலோசனை கொடுத்து, மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X