மக்கள் நீதிமன்றம்: ரூ.30.50 கோடிக்கு தீர்வு| Dinamalar

தமிழ்நாடு

மக்கள் நீதிமன்றம்: ரூ.30.50 கோடிக்கு தீர்வு

Updated : டிச 09, 2018 | Added : டிச 08, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 மக்கள் நீதிமன்றம்: ரூ.30.50 கோடிக்கு தீர்வு

கடலுார்: கடலுார் மாவட்ட கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றங்களில் 4,745 வழக்குகளுக்கு 30 கோடியே 50 லட்சத்து 79 ஆயிரத்து 882 ரூபாய் வழங்க தீர்வு காணப்பட்டது.
கடலுார் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் கடலுார், விருத்தாசலம், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை ஆகிய கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம் நேற்று, நடந்தது. கடலுாரில் முதன்மை மாவட்ட நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி துவக்கி வைத்து பேசினார்.மாவட்டம் முழுவதும் 4,745 வழக்குகள் பல அமர்வுகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 30 கோடியே 50 லட்சத்து 79 ஆயிரத்து 882 ரூபாய் வழங்க தீர்வு காணப்பட்டது.
சிதம்பரம்சிதம்பரம் கோர்ட்டில் இரண்டாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் சார்பு நீதிமன்ற நீதிபதி நீஸ் முன்னிலை வகித்தார்.மோட்டார் வாகன விபத்து வழக்கு, சொத்து நில உடமை மேல்முறையீட்டு வழக்கு, காசோலை மோசடி வழக்கு, அபராத வழக்குகள் என 1200க்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்வு காண எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்குகள் மூலம் 2 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 293 ரூபாய் அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.
மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுதா, கூடுதல் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அறிவு, குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதிகள் அயிஸ் பேகம், பார்த்திபன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கிரி, வட்ட சட்டப் பணிகள் அலுவலர் அஷ்வந் ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விருத்தாசலம்ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், முதன்மை சார்பு நீதிபதி தமிழரசி தலைமை தாங்கினார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி முத்துமுருகன், கூடுதல் நீதிபதி சுப்ரமணியன், மாஜிஸ்திரேட் கோபிநாத் முன்னிலை வகித்தனர்.ஓய்வுபெற்ற நீதிபதி முருகபூபதி, வழக்கறிஞர் விஸ்வநாதன் அடங்கிய குழுவினர் வழக்குகளை விசாரித்தனர்.
கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.975 வழக்குகளுக்கு 5 கோடியே 75 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கு இழப்பீடு ஆணை வழங்கப்பட்டது. இளநிலை நிர்வாக உதவியாளர் புவனேஷ்வரி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
09-டிச-201812:39:07 IST Report Abuse
chinnamanibalan இது போன்று பத்தாண்டுகள் அதற்கு மேற்பட்ட வருடங்களாக உயர் நீதிமன்றத்தில் முடங்கி கிடக்கும் வழக்குகளையும் முடித்து வைக்க ஏற்பாடு செய்தால், வீண் காலதாமதமும் , வழக்கு தாக்கல் செய்த நபர்களின் மன உளைச்சலும் நீங்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X